இப்போது Prologue......
"தமிழ்கெழுகூடல்" "மாட மதுரை மாநகர்" வந்து சேர்ந்த திருமலை நாயக்கர், தன்னுடைய முன்னோர் வசித்த அரண்மனையில் தங்கலானார். கோயிலின் நிலைமையை ஒரு நோட்டம் விட்டார். மாலிக் க·பூரின் காலத்தில் பாண்டியர்கள் கட்டிய கோயிலின் பல பகுதிகள் இஇடிக்கப்பட்டுவிட்டன. அதன்பின்னர் ஏற்பட்ட சுல்த்தானியர் ஆட்சியில் நாற்பத்தெட்டு ஆண்டுகளுக்கு அம்மன் கருவறையும் சுவாமி கருவறையும் பூட்டியே இஇருந்தது.
குமாரகம்பண உடையார் வந்து திறந்து, பூஜைகளை மீண்டும் தொடங்கி வைத்தார். அர்ச்சகர் மரபினர் பலர் இறந்துவிட்டிருந்தனர். சிலருடைய வாரிசுகள் தொலைவில் உள்ள ஊர்களில் வசித்துக் கொண்டிருந்தனர். கோயிலின் கைக்கோளர் படை என்னும் செங்குன்றர் பாதுகாவற் படையினராகிய வயிராவிகளில் சிலர் மட்டும் மதுரையிலும் பக்கத்து ஊர்களிலும் இருந்தனர்.
அவர்களை வைத்து, இரண்டு தலைமுறைகளாக விடுபட்டுப் போனவைகளையும், காணாமற்போன மரபினரையும் மீட்டு, மிச்சம் சொச்சம் மறைத்துவைக்கப்பட்டிருந்த ஆபரணங்கள் முதலியவற்றைத் தேடி எடுத்து கோயிலை நிலைநிறுவினார்.
இந்த விபரங்களும் மேலும் இஇந்தப் பகுதியில் காணப்படும்விபரங்களும் டாக்டர் ஏ.வி ஜெயச்சந்திரனுடைய Ph.D. doctoral thesis ஆன "The Madurai Temple Complex" என்னும் நூலில் உள்ளவை. அத்துடன் நான் சேகரித்த சில விபரங்களையும் கலந்துள்ளேன்.
மேற்குறித்த நூல் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டது. " Turning stumbling blocks into stepping stones" என்பதற்கும், விடாமுயற்சியுடன் கூடிய கடும் உழைப்புக்கும், ஒன்றைச் செய்யும்போதே இன்னொன்றையும் சாதித்துக்கொள்ளமுடியும் என்பதற்கும் ஏ.வி.ஜே.யின் இந்த நூல் ஒன்று சான்று. அந்த சரிதத்தை நம் இளைஞர்களுக்காக எப்போதாவது சொல்ல முயல்கிறேன்.
பின்னர் ஏற்பட்ட விஜயநகரத்தாரின் ஆட்சியில் பல அரசப் பிரதிநிதிகளும் பிரதானிகளும் செல்வந்தர்களும் சிறிது சிறிதாகக் கோயிலை எடுப்பித்து வரலாயினர். விசுவநாத நாயக்கரின் மரபினர் காலத்தில் இந்த திருப்பணிகள் தொடர்ந்தன. திருமலை நாயக்கர் மதுரையில் குடியேறியபோது, அபிஷேகப் பண்டாரம் என்னும் பண்டாரசன்னிதியிடம் கோயில் இஇருந்தது. அந்த ஆசாமி கோயில் வருமானத்தையெல்லாம் கொள்ளையடித்துக் கொண்டிருந்தார். கோயில் நிர்வாகமும் சீரழிந்துவிட்டிருந்தது. வழிபாடுகளும் ஒழுங்காக நடைபெறவில்லை. ஒருநாள் இரவில், மீனாட்சியம்மன் நாயக்கரின் கனவில் தோன்றி, "திருமலையே! என்னை ஒருவரும் கவனிக்கவில்லை!" என்று சொன்னாளாம்.
நாயக்கர் ஒரு தினுசான கேரக்டர்.
அவருடைய நடவடிக்கைகளைப் பார்த்தால் இப்போதுள்ள மா·பியா டான்களின் சாயல் நிறைய அடிக்கும். பாய்ந்து பதுங்குவார்; பதுங்கிப் பாய்வார்.
கோயிலை சீர்திருத்தம் செய்யவேண்டுமானால், முதலில் தன்னுடைய கைக்கு கோயில் வந்து விடவேண்டும். அதற்கு சில வழிகளைக் கையாண்டார். அவை கட்டொழுங்குடையனவா என்பது கேள்விக்குரியதாக இருக்கலாம்.
ஆனால் நாயக்கரோ ஒரு விஷயத்தை மிக நன்கு புரிந்துவைத்துக் கொண்டு, அதனையே ஒரு பாலிஸியாகக் கடைபிடித்தவர்.
அதாவது, "The ends will always justify the means. So, make sure that the suitable ends are there; otherwise make the people accept the means - whatever the ends might turn out to be."
இஇதுதான் நாயக்கரின் வாழ்வியல் தர்மம்.
ஆகவே வைஷ்ணவ மரபைச்சேர்ந்த திருமலை நாயக்கர் சைவ சம்பிரதாயத்தைச் சேர்ந்த அபிஷேக பண்டாரத்தைத் தன்னுடைய குருவாக ஆக்கிக்கொண்டார். பெரும்பணம் கொடுத்தார். நிலங்களை உரிமையாக்கினார். அபிஷேகபண்டாரத்தின் பெயரும் மீனாட்சியம்மன் கோயிலின் திருப்பணியில் முக்கிய இடம் பெறவேண்டும் என்பதற்காக சுவாமி சன்னிதியின் இரண்டாம் பிரகாரத்தைக் கட்டத்தூண்டினார். பண்டாரத்தின் சிலையையும் கோயிலின் ஒரு தூணில் வைத்துவிட்டார். கோயிலின் ஆட்சியை திருமலை நாயக்கர் அபிஷேகப் பண்டாரத்திடமிருந்து பெற்றுக்கொண்டார்.
அந்தக் காலத்தில் "Forceful persuasion and willing compliance" என்பது ஒரு கலையாக விளங்கியது. அபிஷேகப்பண்டாரம் was only too willing to comply.
திருமலை நாயக்கருக்குத் திருப்பணிகள் திருவிழாக்கள் செய்வதும் பிடிக்கும்; ஆட்களை மாறுகால் மாறுகை வாங்குவதும் பிடிக்கும்.
இந்த விருப்புகளெல்லாம் அபிஷேகப் பண்டாரத்துக்கும் தெரிந்திருக்க வேண்டும் அல்லவா? After all, he was a learned man who understood the ways of the world.
No comments:
Post a Comment