ஆஜ்மீரின் சித்தர் ஹஸ்ரத் க்வாஜா மொய்னுதீன் சிஷ்டி
ஆஜ்மீர் என்னும் ஊர் வடநாட்டில் இருக்கிறது. அங்கு ஹஸ்ரத் க்வாஜா முய்னுதீன் சிஷ்டி என்னும் பீர் - சித்தர், ஞானியின் தர்க்கா இருக்கிறது. இந்திய துணைக்கண்டத்திலும் தென்கிழக்காசியாவிலும் உள்ள முஸ்லிம் ஸ¥·பி மார்க்கத்தில்ன் முக்கிய பிரிவுகளில் ஒன்றான சிஷ்டியா மார்க்கத்தின் கர்த்தா.
அவர் பாரசீகத்தில் பிறந்தவர். இளவயதில் அவருக்கு ஒரு ஞானி அருள் செய்தார். அப்போது அவருக்குப் பேரானந்தமும் ஞானத்தேடலும் ஏற்பட்டது. தன்னுடைய உடமைகளையெல்லாம் ஏழைகளுக்குத் தானம் செய்துவிட்டு உலகப் பற்றுக்கள் அனைத்தையும் வெட்டிவிட்டார். ஊர் ஊராகச்சென்றார். ஒரு மஹாஞானியை குருவாக அடைந்தார்.
அந்த மகாகுருவிடம் அவர்கூடவே இருபது ஆண்டுகள் இருந்து
பணிவிடைகள் செய்து கற்கவேண்டியவற்றையெல்லாம் கற்றார். அதன்
பிறகு அவர் மெக்காவுக்கும் மெடினாவுக்கும் தம் குருவால் அழைத்துச்
செல்லப்பட்டார். அங்கு இருக்கும்போது நபிகள் நாயகம் (சல்) அவர்களால் இந்தியாவுக்குச்சென்று மார்க்கத்தை மக்களிடையே பரப்புமாறு ஆணையிடப் பெற்றார்.
அராபியாவிலிருந்து இன்றைய பாரசீகம், ஆ·ப்கானிஸ்தான், உஸ்பெக் நாடுகள் வழியாக இந்தியாவுக்கு வந்தார். வரும் வழியில் அவருக்குப் பல சீடர்கள். பல அற்புதங்களையும் அவர் செய்து நோய்களைத் தீர்த்தார். ராஜஸ்தான் என்று இன்று அழைக்கப்படும் ரஜபுதனாவில் தங்கினார். கிபி 1190-ஆம் ஆண்டில் அவர் ஆஜ்மீருக்கு வந்தடைந்தார். அப்போது அவருக்கு 53 வயது.
அவர் வந்த சமயத்தில் ஆஜ்மீரை பிரிதிவிராஜ் மன்னர் ஆண்டு கொண்டிருந்தார்.
அவர் தங்கியிருந்த இடத்திற்கே வந்து ஆயிரக்கணக்கானவர்கள் தரிசித்துச் சென்றனர். பிரிதிவிராஜ் மன்னரின் ராஜகுருகூட அவருடைய சீடராகினார்.
விரைவில் கோரி முஹம்மது இந்தியாவின் மீது இருமுறை படை
யெடுத்து பிரிதிவிராஜை வென்றான். அவனும்கூட சிஷ்டி மகானை வந்து
பார்த்தான்.
அவருடைய பிரதான சீடர்கள் பல இடங்களுக்கும் சென்று மார்க்கத்தைப் பரப்பினர்.
தம்முடைய 97-ஆம் வயதில் 1236-ஆம் ஆண்டில் முஹம்மது பின்
துக்லக்கின் ஆட்சியின்போது சமாதியடைந்தார்.
மொகலாயப் பேரரசர் அக்பர் முய்னுதீன் சிஷ்டியின்மீது ஆழமான பக்தியைச் செலுத்தியவர். ஆஜ்மீரில் அந்த தர்காவை நன்கு விரித்துக் கட்டினார்.
சிஷ்டி மகானின் சமாதியிருக்கும் தர்காவை தர்கா ஷரீ·ப் என்று
அழைப்பார்கள்.
நான் கோத்தா பாரு என்னும் ஊரிலிருக்கும்போது அவருடைய
அடியார்களில் ஒருவரைச் சந்தித்தேன். பின்னர் அலோர்ஸ்டார் என்னும்
ஊரில் டாக்டர் ஷா என்னும் நண்பரைப் பெற்றேன். இளமையிலேயே ஞானம் படைத்தவர், டாக்டர் ஷா.
எப்போதும் தலையில் முஸ்லிம் குல்லாய் இருக்கும். நுனித்தாடையில்
மட்டும் தாடி வைத்திருப்பார். நெற்றியில் நமாஸ் செய்த வடு.
பார்க்கும்போது ஏதோ ஒரு இஸ்லாமிய Extremist என்று ஹிந்துக்களும்
சீனர்களும் நினைக்கும்வண்ணம் அவர் இருப்பார். நானும் மருத்துவ மனைக்குத் தலைமைப் பொறுப்பில் இருக்கும்போது நெற்றியில் திருநீறு
குங்குமத்துடன்தான் செல்வேன். வீட்டில் இருக்கும் போது மற்ற மதத்தினர்,
இனத்தினர் அலுவல் காரணமாக எந்த நேரத்திலும் வந்து சந்திப்பதுண்டு.
வீட்டில் எப்போதுமே எட்டு முழ வேட்டிதான். திருநீறு இன்னும் பெரிதாகவோ அல்லது பட்டையாகவோ இருக்கும். எப்போதும் பெரிய குங்குமப் பொட்டு.
பிற இனத்தவர்களின் கண்களுக்கு என்னைப் பார்க்கும்போது நான் ஒரு ஹிந்து extremist-ஆகத்தான் தோன்றியிருப்பேன்.
ஆனால் நானும் சரி, டாக்டர் ஷாவும் சரி - மனித நேயத்துக்கும், ஆன்ம நேயத்துக்கும், ஈகைக்கும், இரக்கத்திற்கும் உதாரண புருஷர்களாக
என்றுமே விளங்கிக்கொண்டிருக்கிறோம். நாங்கள் extremist-கள் அல்லர்.
டாக்டர் ஷா நவம்பர் மாதங்களில் ஆஜ்மீருச் சென்று சிஷ்டியின்
தர்காவுக்குப் போய், அங்கு அந்த தர்காவிலேயே சில நாட்கள் தங்கியிருந்து
தியானம், நமாஸ் முதலியவற்றைச் செய்துவிட்டு வருவார். சிஷ்டியின்
போதனைகளில் அவர் நமாஸை மிகவும் அழுத்தமாக வலியுறுத்தி யிருக்கிறார்.
அந்த தர்காவின் சுவர்களில் பலவகையான ஆயுதங்கள் இருந்தனவாம்.
சில தீவிரமான பக்தர்கள் அந்த ஆயுதங்களை எடுத்துத் தங்களின் உடலின்
பல பாகங்களை வெட்டிக்கொள்வார்களாம். ஆனால் காயம் ஏதும் ஏற்பட
மாட்டாது. ரத்தமும் வருவதில்லை.
இந்த மாதிரியான ஒரு சித்தி அவர்களிடம் ஏற்படுவது உண்டு.
அதனை இல்மு கபால் Ilmu Kebal என்றுகுறிப்பிடுவார்கள்.
இதிலேயே இன்னும் சிலவகைகள் உண்டு. அவை பயிற்சிகளாலும்
மந்திர ஆற்றல்களாலும் வருபவை. ராகஜாதி, ஹதீரான், கோடாம் ஹ¥லூ பாலாங் சக்தி போன்றவை. இவையெல்லாம் பாதுகாப்புக்காகவும் மார்ஷியல் கலைகளிலும் பயன்படுத்தப்படுபவை.
உடலை எப்படி கத்தி வெட்டாமலும் ஈட்டி குத்தாமலும் இருக்கிறது?
இல்மு கபாலை நம்முடைய பரிபாஷையில் வஜ்ரதேகம் என்று
குறிப்பிடுவோம்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$