மலேசியாவில் இப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும் அபிஷேகம், விசேஷப்பூஜை என்று பெருமளவிலும் சிறிய அளவிலும் ஏராளமாகச் செய்கிறார்கள். ஒரு காலத்தில் இப்படியெல்லாம் இந்த அளவுக்கு இல்லை. பூஜைகளும் எளிமையானவையாக இருக்கும். இப்போது மிக அதிகமான சரக்குகள், பொருட்களுடன் சிறு சிறு பூஜைகள்கூட செய்யப்படுகின்றன.
முன்பு ஒருமுறை கோமயம் என்னும் மாட்டு மூத்திரத்தை விற்பதைப் பற்றி எழுதி யிருந்தேன். மலேசியாவில் அதையெல்லாம் ஒரு காலத்தில் பூஜைகளில் சேர்த்துக்கொண்டதுகூட கிடையாது. யார் போய் மாடுகள் இருக்கும் இடத்துக்குச் சென்று மாட்டு மூத்திரம் கலெக்ட் பண்ணுவது?
ஆனால் சில ஆண்டுகளாக மாட்டு மூத்திரம் பிலாஸ்ட்டிக் பாட்டில்களில் நிரப்பப்பட்டு கடைகளில் விற்கப்படுகிறது. அதற்கும் மார்க்கெட் நிலவரங்கள் இருக்கும்போல. முன்பு ஒரு சிறிய பாட்டில் 2 ரீங்கிட் 70 காசுக்கு விற்கப்பட்டது. அதன்பின் பார்த்தபோது நூறு மில்லி பாட்டில் மாட்டு மூத்திரம் 1 ரீங்கிட் 20 காசு விலையாக இருந்தது. மார்க்கெட் எனப்படும் சந்தைத்தனம் இதற்கும் ஏற்பட்டுவிட்டது.
ஆனால் சில ஆண்டுகளாக மாட்டு மூத்திரம் பிலாஸ்ட்டிக் பாட்டில்களில் நிரப்பப்பட்டு கடைகளில் விற்கப்படுகிறது. அதற்கும் மார்க்கெட் நிலவரங்கள் இருக்கும்போல. முன்பு ஒரு சிறிய பாட்டில் 2 ரீங்கிட் 70 காசுக்கு விற்கப்பட்டது. அதன்பின் பார்த்தபோது நூறு மில்லி பாட்டில் மாட்டு மூத்திரம் 1 ரீங்கிட் 20 காசு விலையாக இருந்தது. மார்க்கெட் எனப்படும் சந்தைத்தனம் இதற்கும் ஏற்பட்டுவிட்டது.
Supply And Demand, Glut, Mass Production, Distribution, Advertising, Sales, Display, Promotion, இத்யாதிகளுக்கு இதுவும் ஆட்பட்டுவிட்டது. நான் பார்த்த ஷெல்·பில் இரண்டு பிராண்டு மாட்டு மூத்திரம் இருந்தது. இரண்டிலும் லேபில் இருந்தது. அதில் ஒன்றில் ****- கோமியம்' என்று போட்டிருந்தது. இன்னொன்றில் பெயர் கிடையாது. ஒரு லேபிலில் சர்வாலங்கார பூஷிதையாக ஒரு பசுமாடு. அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கும் பசுமாட்டின் படம். இன்னொன்றில் கன்றும் பசுவும். கன்று பால் குடித்துக்கொண்டிருக்கிறது. இதுதான் ரொம்பவும் உதைத்தது. பசுவின் பாலை விற்பதற்கு இந்தப் படத்தைப் பயன்படுத்தலாம். பசுவின் மூத்திரத்திற்கு வேறு மாதிரியாகவல்லவா இருக்கவேண்டும்? சிவப்பு எழுத்துக்களில் 'அருந்தக்கூடாது' என்றும் லேபிலில் போட்டிருந்தார்கள்.
வீட்டையும் பூஜை செய்யும் இடத்தையும் புனிதப் படுத்துவதற்காக மாட்டு மூத்திரத்தைப் பயன்படுத்தவேண்டும் என்ற கருத்து வற்புறுத்தப்படுகிறது. அதனால் இந்த நிலை.
பூஜை செய்யும் இடத்தைப் புனிதப்படுத்துவதற்குச் செய்யவேண்டிய முக்கிய வேலை ஒன்று இருக்கிறது.
சாணத்தைக் கரைத்து அந்த இடத்தை மெழுகிட வேண்டும். யாகம், ஹோமங்களுக்குக் கூட அதை யாரும் செய்வதில்லை.
அதையும் ஸ்பெஷலிஸ்ட் பூசாரிகள், இந்து சமய இயக்கத் தலைவர்கள் வற்புறுத்தக்கூடும்.
அப்போது மாட்டு சாணத்தையும் ஏதாவது டப்பியில் அடைத்து விதம் விதமாக லேபில் ஒட்டி விற்பார்கள்.
Then they will be selling real Cow Shit.
Now they are already selling Bull Shit.