கே ஸெரா ஸெரா.....
பல காலத்துக்கு முன்னால் ஓர் இளைஞர் என்னிடம் கேட்ட சில கேள்விகளுக்கு ஒட்டு மொத்தமாக நான் அளித்த பதில் -
எதிர்காலத்தில் இந்து சமயம் என்னும் பெயரில் தெய்வங்களுடன் பேரம் பேசுதல், கண்மூடித் தனமான மூடநம்பிக்கைகள், ஆர்ப்பட்டமும் ஆரவாரமும் மிகுந்த வழிபாடுகள், மிகப் பெரிய சிலைகள், பெரிய ஹோமங்கள், யாகங்கள், ஏராளமான விதம் விதமான சாமியார்கள், இத்யாதி வகையறாக்கள். ஒவ்வொரு சஞ்சிகையும் எவனாவது ஒரு சாமியார்ப் பயலை - அதாவது ஏதாவது ஒருவகையில் glamourous ஆக இருக்கும் ஆசாமிகளாகப் பார்த்து எடுத்துப்போட்டு ஆதரித்து....... இப்படியே சீரழிந்துகொண்டுபோகும். சாமியார்கள் அரசியல்வாதிகள் கூட்டணிகள் தோன்றும். பணக்காரர்கள், வர்த்தகர்கள் ஆகியோர்களிடம் சாமியார்களின் செல்வாக்கு அதிகரிக்கும். குறிப்பிட்ட சில கோயில்களையும் சில தெய்வங்களையும் சஞ்சிகைகள், டீவீ ஆகியவை மூலம் பிரபலப் படுத்துவார்கள். தவறான நபர்கள் கோயில்களை அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடுவார்கள். மாலிக் க·பூர் அடித்ததை விட இனிமேல் கோயில்கள் மிக நாசுக்காகக் கொள்ளையடிக்கப் படும். கோயில்கள் சுரண்டல் மையங்களாக மாறி விடும். அர்ச்சகர்கள், பூசாரிகள் ஆகியோர் மக்களிடம் மூட நம்பிக்கைகளை வளர்த்து அதன்மூலம் தாங்கள் பெரும் பணக்காரர்களாக ஆகிவிடுவார்கள்.
எவ்வளவுக்கு மூடத்தனங்கள் அதிகரிக்கின்றனவோ அவ்வளவுக்கு நன்மையென்று எண்ணும் இந்துத்துவா இயக்கங்களும் இருக்கும். பிறமத எதிர்ப்பு ஒன்றையே பிரதானமாக எண்ணும் தன்மையே மேலோங்கியிருக்கும். சாதீயம் தலைவிரித்தாடும்.
உபநிஷத் போன்றவை ஆராய்ச்சிக்குரிய விஷயங்களாக இருக்கும். அதையும் யாராவது வெள்ளைக்காரர்கள் செய்வார்கள். அந்த வெள்ளைக் காரர்கள் செய்யும் ஆராய்ச்சியை நம்ம ஆட்களில் சிலர் மேற்கோள் காண்பிப்பார்கள். உயர்குடிப்பெருமான்கள் சிலர், இதனை 'மெக்காலேத் தனம்' என்று கண்டித்து புதிய வரலாறு புதிய சாத்திரங்களை ரீரைட் செய்து கொண்டிருப்பார்கள். மீடியாக்கள் அவர்களைத் தாங்கிக்கொண்டு நிற்கும். அங்கும் சாதீயம்.
இந்த வெள்ளத்தில் பரமாச்சாரியார், வாரியார் எல்லாருமே வாரிக்கொண்டு செல்லப்பட்டு விடுவார்கள்.
ஆனால் ஒன்று..............
ஆர்வமும் ஈடுபாடும் உணர்வும் ஆழமுமிக்க இளைஞர்களும் இருப்பார்கள்.
அவர்களில் சிலர் இவற்றையெல்லாம் தேடி எடுத்துப் பாதுகாத்து அடுத்தடுத்தடுத்த தலைமுறைகளைச் சேர்ந்த இளைஞர்களுக்குச் சேருமாறு செய்துவிடும் சாத்தியங்கள் கொஞ்சமாவது இருந்தால் நல்லது.
The Flame will have to go on burning and the Torch will have to be passed from Hand to Hand.
But I doubt it very much.
Our present generation or their descendants do NOT show any promise.
May be, this is the end of the road?
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$