பொன்வண்டு
பொன்வண்டு இருக்கிறதே....
அதைப் பார்த்திருப்பீர்கள்.
சிறு வயதில் அதன் காலில் நூலைக்கட்டி விளையாடியிருப்பீர்கள். கருநீலப்பின்னணியில் அதன் பல வண்ண ஜாலங்கள் அதன் மேல் படும் ஒளியில் மாறி மாறி மினுக்கிடுவதைப் பார்த்திருப்பீர்கள். அதனை ஒரு டப்பியில் போட்டு மூடிவைத்து அழகு பார்த்திருப்பீர்கள். அதன் உணவுக்காக சில இலைகளையும் கிள்ளிப் போட்டிருப்பீர்கள்.
.
அதனை விஞ்ஞான அடிப்படையில் பார்த்தால் அது நியாயமாகப் பறக்கமுடியாது. குட்டை கட்டையான சிறகுகள். சிறகுக்கே சம்பந்தமில்லாத குண்டான கனமான உடல். போதாததற்கு அந்தச் சின்னஞ்சிறு சிறகுகளின்மீது கவசத்தைப் போன்ற மூடிகள்.
ஒரு T-67 போர் டாங்க்(battle tank) சிறிய மெல்லிய இறக்கைகளைக்கொண்டு பறக்குமா?
அதுபோலத்தான்.
ஆனால் பாருங்கள்....
அந்தப் பொன்வண்டுக்கு இந்த ஏரோ டைனமிக்ஸ் விவகாரங்களெல்லாம் புரியாது.
திருக்குறளில் வருகிறதே அந்த 'அமரகத்தே ஆற்றறுக்கும் கல்லாமா'..... அதைப்போலவேதான்...
படித்ததில்லை.
ஏதும் விஷேச டிரேய்னிங்க் எடுத்ததில்லை.
ரொம்ப நல்லா படிச்சவங்க நாலு பேரிடம் அது கேட்டுத் தெரிந்துகொண்டதுமில்லை.
'விஞ்ஞானபூர்வமாகவோ அதிகாரபூர்வமாகவோ அது பறக்கமுடியாது; ஆகவே பறக்கக்கூடாது' என்று அறியாது. பூரணமாக நம்பப்படவேண்டிய official final versionஐ யாரிடமும் அது கேட்டுத் தெரிந்து
கொள்ளவுமில்லை. அதையெல்லாம் அவசியமாக அது கருதியதும் கிடையாது.
முட்டாள் பொன்வண்டு.
இதெல்லாம் தெரியாது.
ஆகவேதான் அது பறக்கிறது.
அது பறப்பதைக் கேளுங்கள்......
அற்புதமான இசை