சபாஷ்.... ஷா அப்பாஸ்!!!
சபாஷ் என்னும் சொல் பாரசீக மூலத்தைக்கொண்டது.
அதன் கதை.......
பாரசீகம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே முக்கியமான அரசாக விளங்கியது.
ஈராயிரத்தைந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் அது ஒரு பேரரசாக வளர்ந்தது. பாரதத்தின் வடமேற்குப் பகுதிகள், ஆ·ப்கானிஸ்தான், மத்திய ஆசியப்ப்குதிகள், பாரசீகம், ஈராக், சீரியா, ஜார்டான், பாலஸ்தீனம், எகிப்து, துருக்கி ஆகிய தற்காலப்பிரதேசங்கள் அடங்கிய மாபெரும் சாம்ராஜ்யமாக பரந்துவிரிந்து கிடந்தது. அதன் பேரரசன் ஸெர்ஸே, கிரேக்கநாட்டின்மீது படையெடுத்து, கிட்டத் தட்ட வென்றவன். ஐரோப்பாவின் பகுதிகளைப் பழங் காலத்தில் வென்ற மிகச்சில ஆசியர்களில் பெர்சியர்களும் அடங்குவர்.
ஆனல் கிபி 600களில் அந்தப் பேரரசு வீழ்ச்சியடைந்தது. அதன்பின்னர் தொள்ளாயிரம் ஆண்டுகளுக்குப் பாரசீகம் வலுவிழந்து, 'ஏதோ இருக்கிறது' என்று சொல்லும் அளவிற்கே இருந்தது.
பதினைந்தாம் நூற்றாண்டில் இஸ்மாயில் என்னும் மன்னன் பாரசீகத்தை ஒருங்குபடுத்த நினைத்தான். ஆனால் அவனுக்குப் பின்னர் வந்த அவனுடைய மக்கள் சரியாக இல்லாததால் துருக்கர் போன்றவர்கள் மீண்டும் நாட்டைத் துண்டாடினர்.
இஸ்மாயிலினுடைய பேரனாகிய அப்பாஸ் மிஸ்ரா என்பவர் மட்டும் ஒளித்துவைத்து வளர்க்கப் பட்டிருந்தார். அடிக்கடி அவரைக் கொல்ல முயற்சிகள் நடந்தவண்ணமிருந்தன. ஆனால் தப்பிவிட்டார். அவருடைய தாயையும் தந்தையையும் கொலை செய்து விட்டனர்.
அவருக்கு பதினாறே வயதாகும்போது அவன் புரட்சி செய்தார். எப்படியோ பல போராட்டங்களுக்குப் பின்னர் அப்பாஸ் மிஸ்ரா, பாரசீகத்தின் முதல் பேரரசராக ஷா அப்பாஸ் - Shah Abbas - என்னும் பெயரில் முடிசூட்டிக் கொண்டார்.
ஆட்சிக்கு வந்தது முதலில் அங்கு வலுவாக இருந்த அனைவரையும் ஒழித்துக்கட்டினார். இது சில ஆண்டுகளுக்கு நடந்தது. இருப்பினும் தாம் ஆட்சியில் நீடிப்பது குறித்து ஷா அப்பாஸ¤க்கு ஒரு பயம் இருந்துகொண்டேயிருந்தது. ஆகவே சோதிடர்களைக் கொண்டு கணிக்கச்செய்தார். பிறந்தது முதல் பல அபாயங்களைச் சந்தித்தே பழக்கப்பட்டிருந்த அப்பாஸ¤க்கு எப்போதுமே ஒரு சந்தேகம் கலந்த பயம் இருந்தே வந்தது. சனி செவ்வாய் ஆகியவற்றின் சஞ்சார நிலை சரியில்லை என்று சோதிடர்கள் கூறிவிட்டனர். எத்தனை ட்களுக்கு இதுமாதிரி என்று அறிந்து கொண்ட பின்னர், அப்பாஸ் பதவியைவிட்டு இறங்கினார். 'முர்த்தாத்' எனப்படும் அபசாரத்தைப் புரிந்த ஓர் ஆளை அரியணையின் அமர்த்திவைத்தார். பக்காவாகப் பாதுகாப்போடு இதைச் செய்தார். மூன்று நாட்கள் அப்படியே வைத்திருந்துவிட்டு, நான்காம் நாள் அந்த ஆளைக் கொன்றுவிட்டார். கிரக சஞ்சாரம் எல்லாம் சரியாகிவிட்டதறிந்து அரியணையில் மீண்டும் ஏறினார்.
அவனுடைய ஆட்சியில் பாரசீகம் மீண்டும் பழைய உன்னத நிலையை அடைந்தது.
பேரறிஞராக விளங்கிய அவர், பாரசீகத்தின் பல துறைகளிலும் பல சீர்திருத்தங்களைச் செய்தார். யாராலும் வெல்லபடவே முடியாத பெருவீரர் என்று பெயர் பெற்றார். மிக வலுவான அதி நவீனமான எண்ணிக்கையில் அதிகமுள்ள படை. அந்தப் படை வீரர்களால் மிகவும் அன்பாக உயிரினும் மேலாக நேசிக்கப்ப்பட்டார். அப்பாஸைப் பார்க்கும் போதும் படை செல்லும்போதும் 'ஷா அப்பாஸ்' என்று முழக்கமிட்டுக் கொண்டே செல்வார்கள். பழங்காலத்தில் 'ஹெயில் ஸீஸர்', பின்னால் 'ஹைல் ஹிட்லர்' என்று கோஷம் போட்டு வாழ்த்து வணக்கம், சல்யூட் போடுவதுபோல அவர்கள் 'ஷா அப்பாஸ்' என்று முழக்கமிட்டனர். Gladiator படத்தில் பார்த்திருப்பீர்களே, கூட்டங்கள் படைத் தலைவனின் பெயரைச் சொல்லி முழக்கமிடுமிடுமே, "மேக்ஸிமஸ்...மேக்ஸிமஸ்...மேக்ஸிமஸ்...."
தனக்கென்று ஒரு மிகப் பெரிய மிக அழகிய தலைநகரை உருவாக்கினார். அக்காலத்தில் உலகின் மிக அழகிய நகரங்களில் அது தலைமை பெற்று விளங்கியது. அதில் ஒரு பெரிய திடல். அதற்கு மைதான்' என்று பெயர். அங்கு பலவிதமான வீர விளையாட்டுகள் நடைபெறும். அந்த விளையாட்டுக்களின் போது பாராட்டுமுகமாக, 'ஷா அப்பாஸ்.....ஷா அப்பாஸ்....ஷா அப்பாஸ்' என்று முழக்க மிட்டனர். அது ஒரு பாராட்டுச்சொல்லாக மாறி மருவி வந்துவிட்டது. முகலாயர்களுக்குப் பாரசீகத்துடன்
நெருங்கிய தொடர்பு உண்டு. ஜஹாங்கீரின் மனைவி நூர்ஜஹான் பாரசீகப் பெண்தான். பாரசீகர்களின்
தாக்கம் நிறைய ஏற்பட்டது. அவர்களின் மூலம்
'ஷா அப்பாஸ்' இந்தியாவுக்கும் வந்துவிட்டது.
நாளடைவில் அது ஷாபாஸ், ஷாபாஷ், சபாஷ், சவாசு என்றெல்லாம் மருவிவிட்டது.
மலாய்மொழியிலும் அது 'ஷாபாஸ்' என்றே வழங்குகிறது.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$