தமிழகத்தின் பொன்னமராவதியைச் சேர்ந்த சுவாமி சிவாநந்தா என்பவர் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் கோத்தாபாரு வந்திருந்தார். அவர் எல்லாருக்கும் தியானமும் லட்சுமி பூஜையும் சொல்லிக் கொடுத்தார். அவர் சொல்லிக் கொடுத்த மந்திரங்களில் மிகப் பெரும்பான்மையானவை ஒரு சிறுநூலாகிய 'வராகி மாலை' என்னும் நூலில் இருந்தன. ஆனால் பிழைகளுடன் இருந்தன.
ஒரு பெரிய கண்டுபிடிப்பை அப்போது செய்தேன்.
சிவாநந்தா பயன்படுத்திய மந்திரங்கள் பெரும்பாலும் ஸ்ரீஸ¥க்தத்திலிருந்த மந்திரங்கள். ஸ்ரீஸ¥க்தத்தில் பதினைந்து ஜோடி அடிகள் இருக்கின்றன. ஸ்ரீஸ¥க்தம் முழுவதையும் ஒரே மந்திரமாகத்தான் பயன்படுத்துவார்கள். ஆனால் வராகி மாலை புத்தகத்தில் ஒவ்வொரு அடியும் மந்திரமாகப் பயன் படுத்தப் பட்டிருந்தது. ஒவ்வொரு நாமமும்கூட ஒரு மந்திரமாக விளங்கியது. 'நித்யபுஷ்டா', 'ஸ்வர்ணா', 'ஹிரண்மயீ', 'ஹரிணீ' போன்ற நாமங்களும்கூட மந்திரங்களாகப் பிரயோகமாயின. இப்படி மூன்று வகையான பிரயோக முறைகளை ஸ்ரீஸ¥க்தத்திற்கு அந்தச் சிறு புத்தகத்தில் கண்டேன்.
பல மந்திரப் பிரயோகங்களுக்கும் பிரயோகச் சக்கரங்கள் கொடுக்கப்பட்டிருந்தன. அவற்றிற்குரிய துதி, பீஜாட்சரங்கள், நைவேத்தியம், உரு ஆவர்த்தி முதலியவையெல்லாம் கொடுக்கப்பட்டிருந்தன. ஆனால் பிழைகள் மிக அதிகம். அத்துடன் பல மந்திரங்களில் அட்சரங்களையும் பீஜங்களையும் மாற்றியிருந்தார்கள்.
ஆனால் சிவானந்தா சில மந்திரங்களைப் பிழைகளை நீக்கி, பிழையில்லாமலேயே சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தார்.
'Manthras-Self-Taught', 'One Minute Maanthriika' என்ற மாதிரி மோட்டிவேஷனல் குருமார் தானாக என்னத்தையாவது செய்யாமலும் தடுப்பதற்கே இந்த மாதிரியாக ஒரு யுக்தி.
மலேசியாவில் உள்ள பெரிய புத்தக்கடை ஒன்றில் விசாரித்தேன்.
என்ன மாதிரியான புத்தகங்கள் அதிகம் விற்பனையாகின்றன?
மோட்டிவேஷனல் புத்தகங்கள்.
பூஜைகள் செய்வது, துதிகள் போன்றவை.
ஜோதிடம் சம்பந்தப்பட்டவை.
மாந்திரீகம்
இந்தப் புத்தகங்கள் தமிழகத்தில் வெளியாகி இங்கே அனுப்பப்படுபவை. மாந்திரீகப் புத்தகங்களைப் பார்த்தீர்களானால் மயிர் கூச்செறியும். மலையாள மாந்திரீகப் புத்தகங்கள் ஏராளமானவை இருக்கின்றன. அட்டையில் போடப்பட்டிருக்கும் படங்களைக் கொண்டு ஒரு எக்ஸிபிஷனே வைக்கலாம். நாக்கை நீட்டிக்கொண்டிருக்கும் காளியைப் படத்தில் போட்டிருப்பார்கள். பக்கத்தில் மந்திரவாதி. மிகவும் செக்ஸியான மோஹினி படத்தைப் போட்டிருக்கும் புத்தகங்களும் உண்டு. அந்தப் புத்தகங்களில் உள்ளவற்றைச்செய்து அந்த மாதிரிப்பட்ட மோஹினிகளை வசப்படுத்தி என்னவெல்லாம் செய்துகொள்ளலாம்; செய்யவைக்கலாம் என்று ஆட்கள் நினைத்து அதை வாங்குவார்கள். உண்மையிலேயே அப்படியெல்லாம் செய்துவிடமுடியுமா என்பதையோ அப்படியே செய்யமுயன்றாலும் அதன் பக்கவிளைவுகள் எப்பேற்பட்டவை என்பதையோ அவர்கள் அறிவதில்லை.
சில பெயர்களை வைக்கக்கூடாது என்று மலேசிய இந்து சங்கம் மலேசிய அரசாங்கத்தின் பதிவுத்துறையிடம் பரிந்துரை செய்திருக்கிறது. அதுவும் இப்போது சட்டமாகிவிட்டது.
மலேசிய இந்து சங்கம் தடைசெய்யச் சொல்லி தடைசெய்யப்பட்டிருக்கும் பெயர்களில் ஒன்று - 'கருப்பசாமி'
எப்பேற்பட்ட சாதனை!
எப்பேற்பட்ட சிந்தனை!
எப்பேற்பட்ட தொண்டு!
எப்பேற்பட்ட சேவை!
கருப்பசாமி என்ன செய்தாரோ தெரியவில்லை.
இந்த யூஆர்எல்லைப் பார்க்கவும்.
ஆனால் இந்த மாதிரிப்பட்ட பயங்கரத்தன்மை படைத்த புத்தகங்களைத் தடைசெய்வதைப் பற்றியோ, தமிழ்ப்படங்களில் வரும் பயங்கரக் காட்சிகளைப் பற்றியோ கவலைப்படுவதில்லை.