சதுரகராதி
சில ஆண்டுகளுக்கு முன்னர் பினாங்கைச் சேர்ந்த அன்பர் ஒருவர் பேசிக்கொண்டிருந்தார். நீண்ட நாட்களுக்குப் பின்னர் நடைபெற்ற உரையாடல்.
நல்ல தமிழார்வலர். மறைந்துகொண்டிருக்கும் ஒரு Breed. அவர் மாதிரியான ஆட்கள் இனி மலேசியாவில் மிக அரிதாகவே தோன்றுவார்கள். தோன்றினாலும் அப்படியே அமுக்கி அடக்கி
அடையாளம் முகவரி இல்லாமல் செய்து விடுவார்கள்.
பழந்தமிழைப் பற்றிப் பேச்சு சென்றது.
வீரமாமுனிவரைப் பற்றியும் அவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டு பற்றியும் பேசிக் கொண்டிருக்கும் போது வீரமாமுனிவர் தமிழுக்குச் செய்திருந்த தொண்டுகள் சீர்திருத்தங்கள் முதலிவற்றைப் பற்றி பேசப்பட்டது.
அவர் இயற்றிய நூல்களில் ஒன்று 'சதுரகராதி' என்று அவர் படித்திருக்கிறார்.
"அது என்ன நூலய்யா? ஏன் அதற்குப் பெயர் சதுரகராதி?"
"அது சதுரமான புத்தகம்", என்று என்னதையாவதைச் சொல்லி யிருக்கலாம் - வேறு யாராவது கேட்டிருந்தால். ஆனால் இங்கோ, பாவம் இந்த மாதிரி உண்மையிலேயே தமிழின்மீது பற்றும் பக்தியும் வைத்திருப்பவர் கேட்கிறார். இவர் மாதிரி எங்கே இந்தக் காலத்தில் இருக்கப்போகிறார்கள்", என்று மனதில் மின்வெட்டுப்போல் ஓர் எண்ணம் ஓடியது.
விவரித்தேன்.
அது அகராதி நூல்தான். அகராதி என்றதும் இப்போது வழங்கும் டிக்ஷனரி அகராதிதான் மனதிற்கு வரும்.
அகராதி என்பது சொல்லுக்குப் பொருள் கொடுப்பது மட்டுமல்ல.
அகராதிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட வகைகள் உண்டு.
அவற்றில் நான்கு வகைகளை வீரமாமுனிவர் ஒரே நூலில் தொகுத்துக் கொடுத்திருப்பார்.
அதுதான் சதுர் + அகராதி = சதுரகராதி. சதுர் =நான்கு.
ஒரு பொருளுடைய பல சொற்கள்; இவ்வகைச் சொற்கள் அகரமுதலாக அமைக்கப்பட்டிருக்கும். இது பொருளகராதி.
ஒரே சொல்லுக்குப் பல பொருள்கள்; இதுவும் அகரமுதலாக இருக்கும். இது பெயரகராதி.
தொகையகராதி என்பது அஷ்டமங்கலம், சப்த சமுத்திரங்கள், பஞ்ச மூலம், நவரத்தினம், நால்வகை உபாயம், மும்மூர்த்திகள், அறுசுவை, தசாவதாரம் என்று எண்ணிக்கை, தொகையின் அடிப்படையில் வகுக்கப் பட்டவற்றை விளக்கியிருப்பார்கள்.
தொடையகராதியில் எதுகைச் சொற்கள் போன்றவை வரிசையாகக் கொடுக்கப்பட்டிருக்கும்.
இவை நான்கும் சேர்ந்தவையே சதுரகராதி.
அவர் இன்னும் சில கேள்விகளைக் கேட்டார்.....
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$