Thursday, 1 September 2011

THANGA BASPAM



தங்கபஸ்பம்


       தாதுபுஷ்டியைத் தொடர்ந்து தங்கபஸ்பத்தைப் பற்றி கேள்வி ஏற்படும். 
சில உரைகளின்போதும் தனிப்படவும் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகள்: 


1. தங்க பஸ்பம் என்று ஒன்று இருக்கிறதா? அல்லது சித்தரியலில் கண்ட உருவகமா?


2. தங்க பஸ்பத்தில் உண்மைலேயே தங்கம் சேர்கிறதா? 


3. இதைச் சாப்பிடுவதால் இளமை திரும்புமா? 


4. இது விஷத்தன்மை படைத்ததா? 


தங்கபஸ்பம் என்பது ஆயுர்வேத மருந்துகளில் ஒன்று.  
அதனைச்செய்யுமுறைகள் வேறுபடும். தற்சமயத்தில் மூன்று முறைகளைப் பயன்படுத்துவார்கள். 
தங்க ரேக்குதான் மூலப்பொருள். தங்கரேக்கு என்பது சுத்தமான தங்கத்தை மெல்லிய தகடாக அடித்துச்செய்யப்படுகிறது. தாளைவிட மெல்லியதாக இருக்கும். 
தங்கரேக்கை எடுத்து தனலில் வைத்து பழுக்கக் காய்ச்சுவார்கள். பின்னர் அதனை அப்படியே நல்லெண்ணெயில் முக்கி எடுப்பார்கள். 
இதுபோன்று ஏழு தடவைகள் செய்வார்கள். 
அதே மாதிரி, பழுக்கக்காய்ச்சி புளித்த மோரில் ஏழு முறை இட்டு எடுப்பார்கள். பின்னர் பசுவின் மூத்திரத்தில் அவ்வாறு செய்யப்படும். இறுதியாக கொள்ளு தானியத்தின் கொதிக்க வைத்த வடி தண்ணீரில் விட்டு எடுப்பார்கள். 
'ரச கர்ப்பூரம்' என்று ஒன்று இருக்கிறது. 'Mercuric Chloride' என்னும் ரசாயனப் பொருள் அது. நவபாஷாணத்தில் ஒன்றாகும். 
'நவ பாஷாணம் நவ பாஷாணம் என்று சொல்கிறார்களே, அது என்ன?' என்று கேட்கும் முன்னர் சொல்லிவிடுகிறேன். 
சாதிலிங்கம், மனோசிலை, காந்தம், தாரம், கெந்தி, ரஸகர்ப்பூரம், வெள்ளைப்பாஷாணம், கௌரி பாஷாணம், தொட்டிப் பாஷாணம் ஆகியவை. 
ரஸகர்ப்பூரத்தை எலுமிச்சம் சாற்றுடன் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்வார்கள். 
இதனை எடுத்துத் தங்க ரேக்கின் மீது அப்பிவிடுவார்கள். 
அடுத்தபடியாக மண்சிமிழில் கந்தகத்துடன் சேர்த்து வைத்து வாய்ச்சீலை யிட்டு மண்பூசி மூடிவிடுவார்கள். அது காய்ந்தவுடன் புடம் போடுவார்கள். 
எட்டு முறையாவது புடம் போடுவார்கள். எட்டு முறையும் ரசகர்ப்பூரத்தைச் சிறிது சேர்த்துக்கொள்வார்கள்.  பஸ்பத்தின் தன்மையைப் பொறுத்து இன்னும் அதிகமாகவும் புடம் போட நேரிடலாம். 
இன்னொரு முறையும் இருக்கிறது. 'மஞ்சள் கடம்பு' என்னும் தாவரம் ஒன்று இருக்கிறது. அதிலிருந்து ஒருவகையான உப்பு தயாரிப்பார்கள். ஒரு வகைக் கள்ளியின் பாலுடன் இதனைச் சேர்த்து கலவையொன்றைச் செய்வார்கள். இந்தக் கலவையுடன் தங்க ரேக்கைச் சேர்த்து அரைப்பார்கள். அதனைக் காயவைத்த பின்னர், 'கபில நிறம்' போன்ற வண்ணத்தைக் 
கொண்டதொரு பஸ்பம் கிடைக்கும்வரை இரு முறையோ அல்லது அதற்கும் மேலாகவோ அதனைப் புடம் போடுவார்கள். 


வேறொரு முறையில் தங்கரேக்கின் மீது எலுமிச்சஞ்சாற்றுடன் கலந்த ரச கர்ப்பூரத்தை அப்பிப் பழுக்கக் காய்ச்சி, அதனை முள்ளுக்கீரையின் பொடியுடன் கலந்து புடம் போடுவார்கள்.


இதனை சிறிய அளவில் உட்கொள்ளவேண்டும். 
அமுக்குராக் கிழங்கு, பூனைக்காலி, கஸ்தூரி ஆகியவற்றுடன் சேர்த்து அதனைச் சாப்பிடவேண்டும். அந்த மூன்றையும் 'அனுபானம்' என்று சொல்வார்கள். 
முதுமை ஏற்படமாட்டாது. தாது புஷ்டியைத் தோற்றுவிக்கும். பாலுணர்வை அதிகரிக்கும். வீரியத்தையும் ஏற்படுத்தும்.


மேலே கண்ட விபரத்தின் மூலம் முதல் மூன்று கேள்விகளுக்கும் பதில் சொல்லியாகிவிட்டது. 
அடுத்து,  'இது விஷத்தன்மை படைத்ததா? '


விஷத்தன்மை படைத்தது என்று சொல்வதற்கில்லை. 
அதைத் தயாரிக்கும்போது ரச கர்ப்பூரம் சேர்கிறது. இது ஒரு விஷம். நவபாஷாணத்தைச் சேர்ந்தது. கந்தகம் போன்றவையும் வேறு சில மூலிகைகளும் சம்பந்தப்படுகின்றன. 
செய்முறையில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் 'ஹோகயா' - 'HOgayaa'- தானுங்களே? இல்லீங்களா?

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

3 comments:

  1. எம்.ஜி.ஆர் இதைச் சாப்பிட்டதால்தான் அம்புட்டு அழகாக இருந்தாரா?

    அவரின் கிட்னி செயலிழந்தது இதனால் தானா?

    நவபாஷண விஷத்தை முறிக்க ஜப்பான்காரன் மாத்து மருந்து வைத்து இருக்கிறார்களா?

    அவருக்கு குழந்தை இல்லாமல் போனது இதைச் சாப்பிட்டதனால்தானா?
    அன்புடன?

    வரலாற்று வேங்கை டாக்டர் எல். கைலாசம்

    ReplyDelete
  2. ஆமாமுங்கோ.. எனக்கும் ஏற்கெனவே இந்த சந்தேகம் உண்டுங்கோ?
    நம்ம பெரியவர் டாக்டர் ஜேபீ..தான் இவ்வையத்தைத் தீர்த்தளிக்க வேணுமுங்கோ!
    யோகியார் வேதம், நீலாங்கரை

    ReplyDelete
  3. Paambu Kadikku murippu ennago? Paambu visham thanunngo.

    ReplyDelete