ஸாண்டர்ஸின் எழுபதாவது வயதில் யூ.எஸ். கானடா ஆகிய நாடுகளில் மட்டுமே நானூறு விற்பனை நிலையங்கள் இருந்தன. ஏற்கனவே யூ.எஸ்ஸின் கெண்டக்கி மாநிலத்தின் சமையலைப் பிரபலப்படுத்தியதற்காக அந்த மாநிலத்தின் கவர்னர், ஸாண்டர்ஸைக் கௌரவ கர்னலாக்கி சிறப்பித்திருந்தார். இதிலிருந்துதான் கர்னல் ஸண்டர்ஸ் என்ற பெயரும் Chicken Colonel என்ற சிறப்புப் பெயரும் பிரபலமாகின. அந்த பெயரில் விளங்கிய கர்னலின் வரலாறு ஒரு மாபெரும் வெற்றித் தொடர்கதையாகி விட்டது.
நான்கே ஆண்டுகளில் நான்கு கோடி டாலரை வியாபாரம் எட்டிவிட்டது. அவர் இறக்கும்வரை கடுமையாக உழைத்தார். காலை 5-00 மணிக்கே எழுந்துவிடுவார். ஒரே நாளில் நான்கு முறை உடை மாற்றுவார். நெளிவான வெந்நிற நரை முடி, சிறிய மீசை, குறுந்தாடி, வெள்ளை நிறத்திலுள்ள முழு ஸ¥ட், கறு நிறத்து போ-ட்டை. மெட்டல் ரிம் போட்ட வட்டவடிவமான கண்ணாடி. இந்த உருவம் இன்றளவுக்கும் உலகம் முழுவதுமுள்ள பல நாடுகளில் நிலவுகிறது.
அந்த வயதிலும் அவர் ஆண்டுதோறும் லட்சம் மைலுக்கு மேல் பிரயாணம் செய்தார். 1968-ஆம் ஆண்டில் தம்முடைய நிறுவனத்தை அவர் இருபது லட்சம் டாலருக்கு விற்றார். ஆனாலும் கேஎ·ப்ஸீயின் தொடர்பை அறுத்துக்கொள்ளவில்லை. அதன் மார்க்கெட்டிங்கில் அவர் செயல்பட்டார்.
புதிய உரிமையாளர்கள் அந்த ஓராண்டில் விளம்பரத்துக்கு மட்டுமே எழுபது லட்சம் டாலர் செலவிட்டனர். அந்த ஆண்டின் முடிவில் விற்பனை எழுபது கோடியைத் தாண்டியது.
கர்னல் ஸாண்டர்ஸ¤க்குப் பல விருதுகள் கிடைத்தன. உலகின் இரண்டாம் நம்பர் ஸேலெப்ரிட்டி - உலகிலேயே இரண்டாவது மிகப் பிரபலமான மனிதர் என்ற சிறப்பைப் பெற்றார். 1977-இல் யூஎஸ் காங்கிரஸ் கமிட்டியில் 'முதுமை அடைவதை'ப் பற்றி சிறப்புரை ஆற்றினார்.
தர நிர்ணயத்தைப் பற்றிக் கர்னல் கூறியது: "இந்த உலகின் எந்த மூலையாக இருந்தாலும் சரி, கெண்ட்டக்கிச் சிக்கன், நான் ஆரம்பத்தில் என் கையால் சமைத்ததைப் போன்றே அமையவேண்டும்".
அந்தக் கோழிப் பொரியலின் ரெஸிப்பி இன்னும் ரகசியமாகவே வைக்கப்பட்டிருக்கிறது. ஆகையால்தான் கேஎ·ப்ஸீ அசலைப் போன்றே வேறு சிக்கன்களைச் சமைக்க முடியவில்லை.
கேஎ·ப்ஸீ நிறுவனம் பல கைகள் மாறிவிட்டது. 2006-ஆம் ஆண்டில் மட்டும் நூறு கோடி தட்டுகள் கேஎ·ப்ஸீ சிக்கன் விற்கப் பட்டிருக்கிறது.
உழைப்பைப் பற்றி கர்னல் ஸாண்டர்ஸ் - "உழைப்பு யாரையும் கெடுத்தது கிடையாது. தேய்மானம் அடைந்து கெடுவதை விட, பெரும்பாலோர் துருப்பிடித்தே கெட்டு விடுகிறார்கள். நான் துருப் பிடித்துப் போகவே மாட்டேன்".
தம் அறுபத்தாறாவது வயதில் போண்டியாகி ஓட்டாண்டியாகி, எழுபதாவது வயதில் மீண்டும் எழுந்து நின்ற கர்னல் ஸாண்டர்ஸின் வாழ்க்கை நல்லதோர் எடுத்துக்காட்டு.
ஜோதிடத்தில் ஒன்றைச் சொல்வார்கள்.
அதன் பெயர்.....
'விருத்தாப்பிய யோகம்'.
No comments:
Post a Comment