மலேசியாவில் மலாய்க்காரர்களிடம் பலவகையான நம்பிக்கைகள் உண்டு. அவற்றில் ஒன்று..... மலாய்க்கார ஆண்கள் நம்மைப் போல் நவரத்தினக் கற்களை அணியமாட்டார்கள். வேறுவகையான கற்களை அணிவார்கள்.
நவரத்தினக் கற்களுக்கு எப்படி பலன்கள் இருக்கின்றவோ அதே போல்
பலன்கள் இவ்வகைக் கற்களுக்கும் உண்டு. நவரத்தினங்களிடம் இல்லாத சில குணங்களும் பலன்களும்கூட இக்கற்களுக்கு உண்டு. சில கற்கள் மிகவும் அபூர்வமானவை. சிலகற்கள் அற்புத சக்திகள் கொண்டவையாக இருக்கும். மலாய் மாந்திரீகர்கள் இவ்வகைக் கற்களை அணிந்திருப்பார்கள். மலாய் ஆளுங்கட்சிப் பிரமுகர்களும் வைத்திருப்பார்கள்.
மேலேயுள்ள கற்கள் - மாலச்சைட், டைகர்ஸ் ஐ, டர்க்வாய்ஸ், அகேட்
பெரும்பாலும் மோதிரமாகத்தான் கற்களை அணிவார்கள்.
ஆனால் இன்னொரு பாந்த்தாங் தடையும் அவர்களிடையே உண்டு. ஆண்கள் தங்கத்தை உடலின் எந்த பாகத்திலும் எந்த ரூபத்திலும் அணியக்கூடாது.
ஆகவே அவர்கள் பெரும்பகுதி செம்பும் கொஞ்சம் வெள்ளீயமும் கலந்த கலவையைப் பயன்படுத்தி மோதிரங்களைச் செய்வார்கள்.
சிங்கப்பூரில் வெளியிடப்பட்ட ஒரு டாலர் நாணயம் செம்பு, வெள்ளீயம்,
கொஞ்சம் அலுமினியம் ஆகியவை கலந்த கலவையால் ஆனது.
சீனர்கள் நம்மைப்போல 22 பங்கு தங்கமும் 2 பங்கு செம்பும் கலந்த
22 காரட் தங்கத்தைப் பயன்படுத்துவதில்லை. அவர்கள் பெரும்பாலும்
2 பங்கு வெள்ளி, 2 பங்கு செம்பு, 18 பங்கு பொன் ஆகியவை சேர்ந்த கலவையைப் பயன்படுத்துவார்கள். அது மஞ்சள் நிறத்தில் அழகாக இருக்கும்.
கிட்டத்தட்ட அந்த மாதிரியான நிறத்தில் சிங்கப்பூர் டாலர் இருக்கும்.
இந்த டாலரை மோதிரம் செய்யப்பயன்படுத்துகிறார்கள்.
ஆகவே சிங்கப்பூர் ஒரு டாலர் நாணயத்தைக் காண்பது அரிது.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$