Contains articles, thoughts, facts, discoveries, musings of Dr.Jayabarathi better known as JayBee
Saturday, 28 April 2012
TE UNSEEN ILUPPAI OIL
காணா நோக்கா இலுப்பை மலேசியாவின் அஸ்ட்ரோ டீவீயில் ஒலிபரப்பும் நிகழ்ச்சிகளில் மிகப் பெரும்பாலனவை
தமிழ்நாட்டிலிருந்து பெறப்படுபவை.
அவற்றில் உள்ளவற்றில் பெரும்பான்மையானவை மலேசியாவுக்குச் சம்பந்தமும் அறவே இல்லாதவை. மலேசியத் தமிழர்களுக்கு ஆகக்கூடியவையுமல்ல. பயனில்லாதவை.
அடிக்கடி சமையல், ஹெல்த் சமையல், சித்தமருத்துவக் குறிப்புகள் போன்றவற்றைப் போடுவார்கள்.
அவற்றில் பெரும்பான்மையானவை மலேசியத் தமிழர்களுக்கு Practical-ஆக இராதவை.
"இலுப்பை எண்ணெயை சமையலில் சேர்த்துக் கொள்வது நல்லது", என்று ஒரு முறை
சொன்னார்கள். இலுப்பை எண்ணெயைச் சுத்தம் செய்து, சாப்பிடக்கூடியவகையில் பக்குவம் செய்து அதைச் சமையலில் சேர்க்கச் சொன்னார்கள்.
முதலில் இந்தக் கால மலேசியத் தமிழர்களுக்கு இலுப்பை என்றால் என்ன என்பதே தெரியாது.
இங்கு அதைப் போன்ற பழம் ஒன்று அரிதாகக் கிடைக்கிறது. சிறியதாக இருக்கும். தென்வடல்
நெடுஞ்சாலையின்மீதுள்ள பேராக் ஆற்றுப் பாலத்தின் அருகில் உள்ள பழ அங்காடிகளில் கிடைக்கும்.
இலுப்பை என்ற பெயரால் அறியப்படுவதில்லை.
'சிக்கு' என்பார்கள்.
பலருக்கு அந்தப் பழம்கூட பரிச்சயமில்லை.
முன்பெல்லாம் - நாற்பது ஐம்பது வருஷங்களுக்கு முன்பு - மதுரை மருத்துவக் கல்லூரியில் சில
பாட்டுக்களைப் பாடுவோம். மெடிக்கல் காலேஜ் பஸ்ஸில் போகும்போது பாடிக்கொண்டு அட்டகாசமாகப் போவதுண்டு. அந்த பஸ்ஸே அட்டகாசமாகத்தான் இருக்கும். கருநீல வர்ணம். முன் பக்கத்தின் மேல் புறத்தில் பெயருக்குப் பதில் மண்டை ஓடு இரண்டு குறுக்கு எலும்புகளுடன் இருக்கும் படம் இருக்கும். இதை Skull And Cross Bones என்பார்கள். Pirates Of The Caribbean படத்தில் பார்த்திருப்பீர்கள்.
அந்தச் சின்னத்தைத் தாங்கிய கொடியை Jolly Roger என்பார்கள். அந்த பஸ்ஸைப் பிடிக்காத மதுரை
நகரவாசிகள் அதை 'மண்டெ ஓட்டுப் பஸ்ஸ¤" என்பார்கள்.
அந்த பஸ்ஸில் போகும்போது - குறிப்பாக மதுரை டவுனுக்குள் போகும்போது - இந்த அட்டகாசப் பாட்டுக்கள் முழங்க நகரப் பிரவேசம், நகர்வலம் வருவோம்.
அந்த அட்டகாசப் பாட்டுக்களில் ஒன்றில் இந்த அடிகள் வரும்......
"சின்ன மாமீ, சின்ன மாமீ - சிக்குப் பழம் தா
சிக்குப் பழம் இல்லாட்டி - உன்
சின்ன மகளத் தா....."
சின்ன மாமியையும் அவளுடைய சின்ன மகளையும் பார்த்திருப்பார்கள். ஆனால் சிக்குப் பழத்தைப் பார்த்திருக்கமாட்டார்கள்.
சிக்குப் பழமே சிக்கவில்லை. சிக்கெனப் பிடிக்க முடியாது.
அப்புறம் இலுப்பைக்கு எங்கே போவது.
இலுப்பையின் பழுத்த பழத்திலிருந்து முற்றிய கொட்டைகளை எடுத்து, அவற்றிலிருந்து எண்ணெய் எடுத்து......, அவற்றை பேரறிஞர் அண்ணா சொன்ன மாதிரி 'இலுப்பையை வளர்ப்போம். கொட்டையைப்
பிரிப்போம். எண்ணெயை எடுப்போம். சீசாவில் அடைப்போம். இத்தாலிக்கு விற்போம்".... இவ்வாறெல்லாம் சொல்லமுடியாது.
'என்னத்த' கன்னையா சொன்னாப்புல, "என்னத்த இலுப்பய, என்னத்தப் புடுங்கி, என்னத்த கொட்டய, என்னத்தப் பிதுக்கி, என்னத்த எண்ணெய, என்னத்த எடுத்து......."
"வரூஊஊஊம்.... ஆனாஆஆஆ வராது...."
இந்த எண்ணெய் மலேசியத் தமிழர்கள் கடையில் கிடைப்பதானால் அட்சயத் திருதியை தங்கத்தின் விலையாக இருக்கும். தங்கமாவது நகைக் கடையில் கிடைக்கும்.
இந்த கண்காணாத, கிடைக்காத இலுப்பை எண்ணெயைச் சுத்தீகரம் செய்து சமையல் செய்து
சாப்பிடுவது என்பது நடக்கிற காரியமா?
அதற்குப் பதில் ஓமேகா-3, ஓமேகா-6 எண்ணெய்கள் கொண்ட மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடலாமே.
அதைவிட கோஎன்ஸைம் க்யூட்டென்10 - CoEnzyme Q10 சாப்பிடலாம். இளமை திரும்பும்.
இருதயத்துக்கு நல்லது. சுறுசுறுப்பாக இருக்கும்.
"ர்ர்ர்ர்ருக்க்கும்மணியே... பற, பற, பற" என்று பாடிக்கொண்டு சுறுசுறுப்பாக இருக்கலாம்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
Sunday, 8 April 2012
FOR FORGETFULNESS
மறதிக்கு......
"மறதி ஏற்படுவதைத் தவிர்க்க என்னமும் இருக்கிறதா?" என்று ஓர் அன்பர் கேட்டார்.
அவர் சொன்னவற்றை வைத்துப் பார்க்கும்போது, அவருக்கு Transient Amnesia என்னும் வகை மறதி நிலை ஏற்படுவதுபோல் தெரிந்தது.
என்ன செய்யலாம்?
ப்ராணாயாமமும் சில வகைத் தியானப் பயிற்சிகளும் உதவும்.
ஜவஹர்லால் நேரு போன்றவர்கள் ஞாபகசக்தியை மேம்படுத்துவதற்காக தலைகீழாக நின்று சிரசாசனம் செய்தது உண்டு.
வேறு சில யோக ஆசனங்களும் உதவக்கூடும்.
சாப்பாட்டில் மீனும் வெண்டைக்காயும் சேர்த்துக்கொள்வது நல்லது.
நான் சொல்வது அசல் மீன்.
வல்லாரை என்னும் கீரை இருக்கிறது. அதில் வாலரின் என்னும் சத்து உள்ளது. அது மூளையின் சில பகுதிகளில் உள்ள ரத்தக்குழாய்களில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது.
வல்லாரையை வேருடன் ஜூஸ் செய்து பச்சையாகச் சாப்பிடுவது மலேசிய சீனர்களிடையே வழக்கம்.
வல்லாரை மாத்திரையாகக்கூட கிடைக்கிறது.
ஜின்கோ பிலோபா என்னும் மரத்தில் இலைகளிலிருந்து செய்யப்படும் மாத்திரைகளும் இருக்கின்றன.
ஜின்கோவும் மூளையின் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.
ஜின்கோ மாத்திரைகள் ஹெர்பல் மருந்துகள் என்னும் பிரிவின்கீழ் கிடைக்கும்.
ஜின்கோ பிலோபா, வல்லாரை ஆகிய மாத்திரைகளும் அண்ட்டி-ஆக்ஸிடண்ட் வகையைச் சேர்ந்த மாத்திரைகளையும் சேர்த்து தினசரி சாப்பிடலாம்.
அண்ட்டி-ஆக்ஸிடண்ட் என்றால் சித்திக்கு விபத்து என்று நினைத்து விடுவார்கள்.
Anti-Oxidant என்னும் வகை மாத்திரைகள்.
ஓமெகா எண்ணெய்வகைகள், மீனின் கல்லீரல் எண்ணெய் போன்றவை இந்த வகையைச் சேர்ந்தவை.
லைப்பிட் என்னும் கொழுப்பில் கெட்ட கொழுப்பு இருக்கிறது. இந்த அண்டி-
ஆக்ஸிடண்ட்கள் கெட்ட கொழுப்பைக் குறைக்கும்.
ப்லாக் எழுதும் பலருக்கு இருக்கும் கெட்ட கொழுப்பை எந்த அண்டி ஆக்ஸிடெண்டும் குறைக்காது.
அவர்களுக்கு வாழ்க்கையே பாடம் புகட்டவேண்டும்.
ஜின்கோ-பிலோபா, வல்லாரை, ஓமெகா எண்ணெய் ஆகிய மாத்திரைகளைச் சாப்பிட்டுக்கொண்டு பிராணாயாமம், சில ஆசனங்கள், சில தெய்வங்களின் பீஜ மந்திரங்களை ஜபம் செய்தல் முதலியவற்றைச் நடப்பிலேயே செய்துவருவது நல்ல பலனைத் தரும்.
'சில தெய்வங்களின் பீஜ மந்திரங்களை ஜபம் செய்தல்' என்பது குறித்த கேள்வி.
"எந்த தெய்வங்களின் எந்த பீஜங்கள்?" என்று ஒருமுறை கேட்கப்பட்டது.
சரஸ்வதியின் அம்சமாக விளங்கும் சில தேவதைகள் உண்டு. அவர்களின் பீஜங்கள் ஞாபக சக்தியை அதிகரிக்கும். கல்விக்கும் உதவும். ஆராய்ச்சிக்கும் உதவும். கவிதா சாமர்த்தியத்தையும் ஏற்படுத்தும்.
ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்யும் மூலிகைகளில் ஒன்றாக வல்லாரைக் கீரையைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன்.
வல்லாரைக்கு சமஸ்கிருதத்தில் 'ப்ராஹ்மி' என்று பெயர்.
ப்ராஹ்மி என்பது சரஸ்வதியின் பெயர்களில் ஒன்று.
வல்லாரை என்பது சரஸ்வதியின் மூலிகையாகக் கருதப்படுவது.
பிரம்மபத்ரம் எனப்படும் பிரம்மாவின் மூலிகையும் ஒன்று இருக்கிறது.
வல்லாரையால் ஞாபகசக்தியும் வளரும்; அறிவாற்றலும் வளரும்........ மயிரும் வளரும்.
'ப்ராஹ்மி ஹேர் ஆயில்' என்று கேள்விப்பட்டதில்லையா?
ஹிமாலயா கம்பெனியிலோ இம்காப்ஸிலோ வல்லாரை மாத்திரைகள் கிடைக்கும்.
ஜின்கோ பிலோபா மாத்திரைகளில் மிகவும் விலை மலிவானது இந்தியாவில் தயாரிக்கப்படும் மாத்திரைதான். ஆனால் நல்ல தரம் வாய்ந்தது.
ஞாபக சக்தியையும் சிந்தனையையும் ஊக்குவிப்பதற்கு பிரம்மபத்ரத்தை ஏதாவது வகையில் பயன்படுத்துவார்கள்.
அல்லது க·பீனா தேவியின் பேரருளை நாடுவார்கள்.
க·பீனா தேவி என்பவள் கா·பி போன்ற பானங்களின் அதிதேவதை. ரோம் பேரரசின் தேவதைகளில் ஒருத்தி.
பீஜ மந்திரங்களை அவரவர் இருக்கும் இடங்களில் உள்ள தக்கவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.
இதெல்லாம் உபதேசமாக வாங்கிக்கொள்ளவேண்டிய சங்கதி.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
Subscribe to:
Posts (Atom)