உங்கள் சிந்தனைக்கு - #12
எப்போதும் இருந்த மாதிரியில்லாமல் இப்போது இந்துக்களிடையே விதம் விதமான யாகங்கள், ஹோமங்கள் போன்றவை அதிகமாகச் செல்வாக்குப் பெற்றுவருகின்றன. அவற்றைச் செய்பவர்களும் அதிகரித்து வருகிறார்கள்.
சாதாரணமாகச் செய்வதற்கே பயப்படக்கூடிய, அதி உக்கிரமானவை என்று கருதப்பட்ட பிரத்யங்கிரா ஹோமம் போன்றவையெல்லாம் அதிகமாகச் செய்யப்படுகின்றன.
எவ்வளவுக்கு அதிகச்செலவில் எவ்வளவு அதிகமான சடங்குகளுடன் எவ்வளவு அதிக நேரம் செய்யப்படுகிறதோ, அந்த அளவுக்கு அந்த வழிபாடு சிறப்பானதாகக் கருதப்படுகிறது. அத்தகைய சடங்குகளும் வழிபாடுகளும் மட்டுமே தெய்வங்களின் அருளைப் பெற்றுக்கொடுக்கும் என்ற நம்பிக்கை வலுப்படுத்தப் படுகிறது.
தானாகவே தெய்வத்திடம் நேரடியாகச் செய்யப்படக்கூடிய பிரார்த்தனைகள் வேலை செய்ய மாட்டது என்று மலேசியாவில் பிரச்சாரமே செய்யப்படுகிறது.
நேரடி வழிபாட்டுக்கு எதிரான போக்குகள் அதிகம் பரவி வருகின்றன.
கிடைப்பதற்கு அரிது என்று கருதப்பட்ட வலம்புரிச்சங்கு, வெள்ளெருக்கு விநாயகர் போன்றவை ஏராளமாகக் கிடைக்கின்றன. அவரவர் வீடுகளில் எவ்வளவு பெரிய ஸ்ரீசக்ர மகாமேரு வைத்துப்பூஜை செய்கிறார்கள் என்பதுகூட ஒரு status symbol ஆகிவிட்டது. Holier than Thou attitude என்பதுவும்
அதிகரித்துவிட்டது.
வெள்ளெருக்கு என்பது அதிகமாகக் காணப்படமாட்டது. மிகப் பெரிய செடியின் முற்றிய வேர்; அதுவும் ஒரு குறிப்பிட்ட திசையில் ஓடக்கூடியதாக இருக்கவேண்டும்; அப்படிப்பட்ட செடியின் வேரை குறிப்பிட்ட திதியன்று நேரம் கணித்து, அந்த வேருக்குக் காப்புக்கட்டி, சாப நிவர்த்தி செய்து, பூஜை செய்து எடுப்பார்கள்.
அந்த வேர் ரொம்பவும் தடிமனாக இராது. ஒரு பெருவிரற்கடைப் பிரமாணம் கொண்ட வேர் கிடைப்பதுகூட அருமையான விஷயம்.
அப்படியானால் கடைகளில் அத்தனை பெரிதாக வெள்ளெருக்கு விநாயகர் கிடைக்கின்றன; அதுவும் அத்தனை பருமனானவை கிடைக்கின்றனவே? எப்படி?
நிறையப் போலிகள் இருக்கின்றன. பால்ஸம் என்னும் கட்டையிலிருந்து பெரும்பாலும் செய்யப்படுகின்றன.
வெள்ளெருக்கு விநாயகரை வைத்துக்கொள்ளக்கூடியவர்களுக்கென்று சில உபாசனைகள் இருக்கின்றன. உபாசகர்களே அதனை வைத்துக் கொள்ள முடியும்.
பொதுவாகவே எருக்கஞ்செடி வீடுகளில் இருக்கக்கூடாது என்பது ஒரு சாத்திர விதி. ஔவையாரின் பழம்பாடல்கூட ஒன்று இருக்கிறது.
ஆனால் எருக்கம்பூக்களை விநாயகருக்குச் சாற்றவேண்டும் என்பதற்காகவே வீடுகளில் இப்போது எருக்கஞ்செடிகள் வைத்திருக்கிறார்கள்.
யாராவது entrepreuner-கள் வெள்ளெருக்குப் பண்ணை வைக்கக்கூடும். வெள்ளெருக்குச்செடி வரிசைகளுக்கு நடு நடுவில் நாயுருவி பயிர் செய்யலாம்.
பிரத்தியங்கிரா ஹோமத்துக்கு நாயுருவி வேண்டியிருக்குமே!
நல்ல venture-ஆக இருக்கும். இப்போது weight by weight சந்தனக் கட்டையை விட வெள்ளெருக்கு வேரின் விலை மிக அதிகம்.
Jet-set சாமியார்களோ ஜனரஞ்சக இதழிகளில் தொடர்கள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
சமய சமுதாயச் சீர்கேடுகளை இந்த மாதிரியான successful சாமியார்கள் எடுத்துக் காட்டுவதில்லை. அவர்கள் இருக்கும் உயரத்தில் இருந்துகொண்டு கீழே சமுதாயத்தைப் பார்ப்பதில்லை. அதெல்லாம் தேவையுமில்லை.
They tread a safe ground.
இன்னும் விரிவாகப் பார்ப்போம்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$