Wednesday, 30 November 2011

STRANGE AND TRUE-#1

அதிசயம் ஆனால் உண்மை -#1
இந்தப் பிரபஞ்சத்தில் பல விஷயங்கள் மர்மமான முறையில் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு விளங்கும்.
அந்த மாதிரியான தொடர்பின் பின்னால் உள்ள தத்துவம் நமக்குப் புரியாது. இதற்கும் அதற்கும் ஏன் அந்தத் தொடர்பு இருக்கிறது, அது எப்படி ஏற்பட்டது என்பன போன்றவற்றையெல்லாம் நாம் அறியவே முடியாது. ஏதோ ஒரு சூட்சுமமான தொடர்பு, அவ்வளவுதான். மந்திரங்களின் உச்சாரணம், அவற்றுடன் சேர்ந்த முத்திரைகள், உபசாரங்கள், யந்திர ஸ்தாபனம், பிரயோக முறைகள் - இவற்றுக்கு இடையே உள்ள தொடர்பு உண்டு. ஸ்தாபனம், சான்னித்தியம் என்று விஷயங்கள் எல்லாம் அவற்றின்
சம்பந்தம் உள்ளவைதாம்.
அந்த வெண்டைச்செடி ஏன் அத்தனை அடி உயரத்துக்கு வளர்ந்தது? அதே முறை ஏன் மீண்டும் மீண்டும் வேலை செய்தது?
It was a repeatable feat.
அதை அறிந்துகொள்வதற்கு முயலவேண்டும்.

பலாப்பழம் இருக்கிறது. அதை உடைக்காமல் அதன் உள்ளே எத்தனை சுளைகள் இருக்கின்றன என்று அறியமுடியுமா?
முடியும்.
'கணக்கதிகாரம்' என்றொரு நூல் இருக்கிறது. அதில் இதற்குரிய ·பார்முலா சொல்லப் பட்டிருக்கிறது.

பலவின் சுளையறிய வேண்டுதிரேல், ஆங்கு
சிறுமுள்ளுக் காம்பருகு எண்ணி - வருவதை
ஆறிற் பெருக்கியே, ஐந்தினுக்கு ஈந்திடவே
வேறெண்ண வேண்டாம் சுளை.

பலாப்பழத்தின் காம்புக்கருகில் உள்ள சிறுமுட்களை எண்ணவேண்டும். 
அந்த எண்ணிக்கையை ஆறால் பெருக்கவேண்டும்.  அந்த எண்ணை ஐந்தால் வகுக்கவேண்டும்.  முடிவாகக் கிடைக்கும் தொகைதான் அந்தப் பலாப்பழத்தில் உள்ள சுளைகளின் எண்ணிக்கை.
<இதை ஒருமுறை பரீட்சை செய்து பார்த்தேன். சரியாகவே இருந்தது.>

இந்த வித்தையை அறிந்த புலவர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் அப்துல் காதிர். சீறாப்புராணத்தை எழுதிய உமறுப் புலவரின் பேரர். அவர் அட்டாவதானமும் செய்வார்.
அட்டாவதானம் என்றால் என்ன?
ஒரே சமயத்தில் எட்டுப் பேர் சூழ்ந்திருப்பார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஒரே நேரத்தில் எட்டு விதமான விஷயங்களைச் செய்யச்சொல்வார்கள்; அல்லது கேள்விகளைக் கேட்பார்கள். நோட்ஸ் ஏதும் எடுக்காமலேயே அத்தனை விஷயங்களையும் உடனடியாகச் செய்யவேண்டும், பதிலும் சொல்ல வேண்டும். கொஞ்சம்கூட யோசிக்கக்கூடாது. தயங்கவும் கூடாது. தவறாகவும் இருக்கக்கூடாது. 
ஒருவர் பூவை மேலே போட்டுக்கொண்டிருப்பார். இன்னொருவர் அவ்வப்போது மணி அடிப்பார். வேறொருவர் ராகங்களைப் பாடுவார். இன்னொருவர்  கேள்வி கேட்பார். வேறொருவர் எதாவது ஈற்றடி சொல்லி, அதை வைத்துக் கவிதை புனையச் சொல்வார். ஒருவர் முருகன் துணை என்று சொல்லிக்கொண்டேயிருப்பார். அதே நேரத்தில் சித்திரம் வரையவேண்டும். கொடுத்திருக்கும் வண்ண மணிகளை வரிசை மாறாமல் கோர்க்கவேண்டும்.
குறிப்பிட்ட நேரத்துக்குள் மணிகள் சரியான வரிசையில் கோர்க்கப் பட்டிருக்க வேண்டும். கவிதை சரியாக முடிக்கப்பட்டிருக்கவேண்டும். எத்தனை தடவை மணி அடிக்கப்பட்டது என்பதையும் சொல்லவேண்டும். கேட்ட கேள்விகள் அனைத்துக்கும் பதில் சொல்லியிருக்கவேண்டும். தம் மேல்  விழுந்த பூக்கள் எத்தனை என்பதையும் சொல்லவேண்டும். எத்தனை 'முருகன் துணை' சொல்லப்பட்டன என்பதையும் சொல்லவேண்டும். படமும் வரைந்து முடித்திருக்கவேண்டும். ரகங்களையும் சரியாகச் சொல்லியிருக்கவேண்டும்.
ஒருமுறை அவர் அட்டாவதானம் செய்துகொண்டிருக்கும்போது அவரைப் பரீட்சை செய்துகொண்டிருந்த எட்டுப் பேர்களில் ஒருவர் மாணிக்கம் பிள்ளையின் மகன் பெருமாள் என்பவர். அவர் புலவரிடம் ஒரு பலாப்பழத்தைக் கொடுத்து, சுளைகளின் எண்ணிக்கையைக் கேட்டார்.
அப்துல் காதிர், கணக்கதிகார ·பார்முலாவைப் பயன்படுத்தி யிருக்கிறார். அவருக்கு கிடைத்த எண்ணிக்கையை அப்படியே ஒரு வெண்பாவில் அடக்கிச் சொன்னார்.

மாணிக்கம் பிள்ளை மகனாம் பெருமாள்தம்
காணிக்கை யாயிங் களித்த - பாணிக்கைத்
தின்னத் தெவிட்டாத தேனார் பலாப்பழத்தில்
தொண்ணூற்றி யாறு சுளை.

பாருங்கள். Methodology and Application என்று சொல்வார்கள் அல்லவா? அது இதுதான்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Sunday, 27 November 2011

BIRTH OF A MAHATHMA


ஒரு மஹாத்மாவின் தோற்றம்          மஹாத்மா காந்தியின் பல கோட்பாடுகளில் Personal Hygiene முக்கிய இடம் பெற்றிருக்கும். அவர் சொன்ன கிராமராஜ்யத்தில் கிராமப்புனருத்தாரணம் என்பது மிகவும் அடிப்படையான விஷயம். 
'சுத்தம், சுகம், சுந்தரம்' என்பது ஒரு தாரக மந்திரம். 
அந்த அடிப்படையில் sewage and sewerage மிகவும் முக்கியமானவை. 
எளிமையான கழிவறைகள் கட்டுவதையும் அவற்றைச் சுத்தப்படுத்துவதையும் அவரே நேரடியாக மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதுண்டு. 

மஹாத்மா காந்தியின் வாழ்வியல் சிந்தனைகளை மாற்றியவை மூன்று புத்தகங்கள். 
அவர் தென்னா·ப்ரிக்காவில் முதல்முதலாக ரயில் செல்லும்போது முதல் வகுப்பில் சென்றார். 

ஆனால் அந்த நாட்டில் நிறுவப்பட்டிருந்த 'அப்பார்ட்டைட்' இனவெறிக்கொள்கையின் விளைவாக நள்ளிரவில் ஏதோ ஒரு ரயில்வே ஸ்டேஷனில் பெட்டிபடுக்கையுடன் தூக்கி எறியப்பட்டார்.
அப்போது அந்தக் குளிரில் அவர் நினைவுக்கு வந்தது 'பகவத் கீதை'.
இயற்கையிலேயே கூச்சமும் அச்சமும் மிகுந்த காந்தி, அந்த இருளின் குளிரில் வெடவெடத்துக் கொண்டு பகவத்கீதையின் அடிப்படையில் ஒரு தீர்மானத்தைச்செய்துகொண்டார். 
இனிமேல் எதற்கும் யாருக்கும் மசிந்துகொடுப்பதில்லை.


அதிலிருந்து அவருடைய வாழ்க்கையே மாறியது.
அவருடைய வாழ்க்கையில் ஒரு mission and vision ஏற்பட்டுவிட்டன.

பத்தாண்டுகளுக்குப் பின்னர் இன்னொரு பயணத்தின்போது அவர் John Ruskin எழுதிய 'Unto This Last' என்னும் புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தார்.
இது இன்னொரு திருப்புமுனையை ஏற்படுத்தியது.
அன்றிலிருந்து  உடமைகளின் மீதும் பணத்தின்மீதும் இருந்த பற்றுக்களை நீக்கிக்கொண்டார். தமக்கென வாழா, பிறர்க்கென வாழும் பெருந்தகையாக மாறினார். 
ஜான் ரஸ்க்கினின் இறவாத்தன்மை பெற்ற வரி:


"Riches are just a tool to secure power over men. A labourer with a spade serves society as truely as a lawyer with a brief, and the life of labour, of the tiller of the soil, is the life worth living".


ஏற்கனவே அவர் தம் வாழ்க்கையிலேயே சில பரிசோதனைகள் செய்துகொண்டிருந்தார். 
பகவத்கீதையின் அமர வாக்கியங்களின் அடிப்படையில் அவருடைய வாழ்க்கை அமைந்துள்ளதா? 
பற்றின்மையைப் பற்றி பகவான் கூறியுள்ளாரே? 
ஆகையால் தம்முடைய மயிரைச் சொந்தமாக வெட்டிக்கொண்டார். கக்கூஸ் கழுவினார். தாமே துவைத்துக்கொண்டார். அவருடைய மனைவிக்குச் சொந்தமாகப் பிரசவம் பார்த்தார். 
ரஸ்க்கினின் நூலைப் படித்தபின்னரே தென்னா·ப்ரிக்காவில் அவர் ·பீனிக்ஸ் ஆசிரமப் பண்ணையை ஏற்படுத்திக்கொண்டார். அதுதான் அவருடைய கூட்டுப்பண்ணை, community living 
போன்ற கொள்கைகளுக்கு ஆரம்பமாக விளங்கியது.
தென்னா·ப்ரிக்காவில் வாழும் வெள்ளையரல்லாதாரெல்லாம் அடையாளக்கார்டுகள் வைத்திருக்க வேண்டும் என்ற சட்டத்தை எதிர்த்து மறியல் செய்தார். அதற்கு அவர் 'சத்யாக்கிரஹம்' என்ற 
பெயரிட்டார்.

சிறையில் இருக்கும்போது அவர் Henry Thoreu எழுதிய 'On Civil Disobedience' என்னும் கட்டுரையைப் படித்தார். 
அது இன்னொரு திருப்புமுனையை அவர் சிந்தனையில் தோற்றுவித்தது.  
தோரோவின் வரிகள்:


"An individual had a right to ignore unjust laws and refuse his allegience to a government whose tyranny had become unbearable. To be right, was more honourable than to be law-abiding. 
ஒத்துழையாமை இயக்கம் போன்ற சில கோட்பாடுகளுக்கு இவ்வரிகள் வழி வகுத்தன. 
இன்னொரு புத்தகம்?
Leo Tolstoy-யின் 'War and Peace'. 


இத்தனைக்கும் அடியில் இருந்த அந்த 'சுத்தம்.,சுகம், சுந்தரம்'.  


"The lessons which I propose to give you are how you can keep the village water and yourselves clean. What use you can make of the earth, of which your bodies are made; how you can obtain the infinite life force from the infinite sky over your heads; how you can reinforce your vital energy from the air which surrounds you; how you can make proper use of sun-light".
"Those who are in my company must be ready to sleep upon the bare floor, wear coarse clothes, get up at unearthly hours, subsist on univiting, simple food, even clean their own toilets".


அப்பேற்பட்ட காந்தியின் நாட்டில் இந்த கதி!


காந்தி கக்கூஸ் கழுவினார்.


நீங்களெல்லாரும் காந்தியையே கைகழுவிவிட்டீர்கள்.


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Friday, 18 November 2011

ENAKKENNA

எனக்கென்ன?


        எப்போதோ படித்த கதை........
  'என்னக்கென்ன?'


  ஒரு வெள்ளைக்கார விவசாயியின் விவசாயப்பண்ணையில் நடந்த கதை. 
  அங்கு ஒரு சுண்டெலி இருந்தது.
ஒருநாள் பண்ணைவீட்டின் சமையற்கட்டில் ஓர் எலி இடுக்கியைப் பார்த்துவிட்டது. 
"ஆகா நமக்காகத்தான் இதை வைத்திருக்கிறார்கள். இதில் மாட்டிக்கொண்டுவிட்டால் என்ன செய்வது?" என்ற பயத்தில் அது ஓடிப்போய் அந்தப் பண்ணையில் இருந்த கோழியிடம் முறையிட்டது. அது எலியின் நெருங்கிய சகா.
"சமையற்கட்டில் ஒரு எலி இடுக்கி இருக்கிறது. சமையற்கட்டில் ஒரு எலி இடுக்கி இருக்கிறது. சமையற்கட்டில் ஒரு எலி இடுக்கி இருக்கிறது".
கோழி அதைக் கேட்டுவிட்டு, "அது எனக்காக வைக்கப்பட்டதல்ல. எனக்கென்ன?" என்றது. 
சுண்டெலி அங்கிருந்த பன்றியிடம் முறையிட்டது. 
"சரிதான். எனக்கென்ன?" என்று சொல்லிவிட்டுப் பன்றி போய்விட்டது. அதுவும் ஒரு 
நண்பன்தான்.
பண்ணையின் காளை மாடுதான் அங்கிருந்த பிராணிகளில் பெரியது. அதனிடம் சென்று அழுதது. 
காளை மாடோ,"நீ அதில் விழாமல் இருக்க உனக்காக வேண்டுமானால் பிரார்த்திக்கிறேன். மற்றபடி அதனால் எனக்கென்ன?" சென்று சொல்லிவிட்டது.
அன்று இரவு தூங்காமல் சுண்டெலி அழுதுகொண்டும் பயந்துகொண்டும் தன் வளையில் பதுங்கிக் கொண்டிருந்தது.
திடீரென்று படீரென்று ஒரு சப்தம். இடுக்கியில் ஏதோ விழுந்துவிட்டது. 
அடுத்த நாள் காலை சமையற்கட்டிற்குள் சென்ற விவசாயியின் மனைவி எலி இடுக்கியைப் 
பார்க்கச் சென்றாள். ஆனால் அதில் மாட்டியிருந்தது, ஒரு பாம்பு. வால் மட்டுமே மாட்டிக்
கொண்டிருந்ததால் வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தது. 
விவசாயியின் மனைவி அருகில் வரவும் அவளுடைய காலில் ஒரு போடு போட்டுவிட்டது. 
விவசாயி தன்னுடைய மனைவியைப் பாம்பு கடித்துவிட்டதை அறிந்து முதல் உதவி செய்தான். வைத்தியரிடமும் காட்டி மாற்று மருந்தைக் கொடுத்தனர். 
வீட்டில் விவசாயியின் மனைவி ரொம்பவும் பலவீனமாகப் படுத்திருந்தாள். 
பக்கத்துப் பண்ணைக் கிழவி சில வேர்களையும் மூலிகைகளையும் கொண்டுவந்தாள். 
கோழியைப் பிடித்து வெட்டி, அதை சூப் வைத்தாள். மூலிகைகளை அதில் போட்டு வேகவைத்து விவசாயி மனைவிக்குக் கொடுத்தாள். 
அவளைப் பார்க்க இஷ்டமித்திர பந்துக்கள் எனப்படும் சுற்றமும் நட்பும் வந்தார்கள். வெளியூர் ஆட்களும் அங்கு வந்து தங்கினார்கள். அவர்களுக்கெல்லாம் சாப்பாடு போடவேண்டியிருந்தது. 
ஆகவே பன்றியை அடித்தார்கள். பிரட்டல், வறுவல், அது, இது என்று ஆக்கி வைத்துக்கொண்டு எல்லாரும் சாப்பிட்டார்கள். 
விவசாயி தன்னுடைய மனைவி நலமாக ஆகவேண்டும் என்று வேண்டுதல் செய்துகொண்டான். 
சீக்கிரமே மனைவி நலமாகினாள். 
ஆகவே ஊரையே கூட்டி அழைத்து ஒரு பெரிய நன்றி காட்டும் விருந்துக்கு ஏற்பாடு செய்தான். அவர்களுடைய வழக்கம் அது.
காளை மாட்டை அடித்தார்கள். அதுதான் அந்த வந்தனை செய்யும் விருந்தின் முக்கிய அயிட்டம். 
இது அத்தனையையும் தன்னுடைய வளையிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தது அந்தச் சிறிய சுண்டெலி.
விதி!

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


Wednesday, 16 November 2011

BEYOND THE FIFTH, SIXTH AND #1

ஐந்துக்கும் ஆறுக்கும் அப்பாலும் அப்பாலுக்கு அப்பாலும் -#1

ஐம்புல அறிவுக்கும் அப்பாற்பட்ட ஆறாவது அறிவு இருக்கிறது. தமிழ் மரபில் 'ஆறறிவு படைத்த மனிதன்' என்றும் 'ஐந்தறிவு படைத்த ஜீவராசிகள்' என்றும் சொல்வதுண்டு அல்லவா.
மேற்கத்திய மரபுப்படி, அவர்கள் ஐம்புல அறிவைக் கணக்கில் கொண்டு அந்த ஐம்புலன்களால் உணரப்பட முடியாத அறிவை-உணர்வை ஆறாவது அறிவு என்று கொள்கிறார்கள்.  Sixth Sense என்று அதைக் குறிப்பிடுவார்கள். புலன்களுக்கு அப்பாற்பட்ட அறிவை-உணர்வை அவர்கள் Extra-Sensory Perception என்று சொல்வார்கள். இதையே சுருக்கி ESP என்பார்கள்.
நம்முடைய மரபுப்படி எடுத்துக்கொண்டோமானால் ஆறாவது அறிவுக்கும் அப்பாற்பட்ட 
அறிவுகளும் இருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
இதை நன்கு அறிந்தவர்கள்......
ஐம்புலன்களின் செயல்பாட்டை மிகவும் குறைத்து, அவற்றின் மூலம் கிடைக்கும் Feed-back முதலியவற்றில் மிக மிக அடிப்படையான, மிக அதிகத் தேவையானவற்றை மட்டும் உணர்ந்துகொண்டு, அவற்றைப் பயன்படுத்திக் கொள்வார்கள். மற்றபடிக்கு மற்ற எல்லா ஐம்புலத் தகவல்களையெல்லாம் தடுத்துவிடுவார்கள்.
"ஐம்புலக் கதவை அடைப்பது" என்ற ஔவையார் வாக்கைத் தேவையான அளவுக்கு மட்டும் பின்பற்றி, அந்தக் கதவை அரைக்குறையாகச் சார்த்திக் கொள்வார்கள்.
இந்த நிலையில் அந்த அதீத அறிவு வேலைசெய்யும். ஐம்புலக் குறிக்கீடு குறைவான நிலையில் அது சிறப்பாக வேலை செய்யும்.
செங்கல்களை அடுக்கிவைத்துக்கொண்டு, அவற்றை ஒரே குத்தில் உடைக்கப்போகும் அந்த டைக்குவாண்டோ வீரனின் மனநிலையையும் கண்கள் முதலிய அவயவங்களையும் கவனித்திருக்கிறீர்களா.
ஹை ஜம்ப் விளையாட்டன் ஓடிப்போய் குதிப்பதற்கு முன்னால் தூரத்தையும் குறுக்குக் கம்பையும் பார்த்தவாறு இருப்பான். பின்னர் குறுக்குக் கம்பத்தை மட்டும் பார்ப்பான். அதன் பின்னர் மெதுவாக உடலை முன்புறமாகச் சாய்த்து நின்று அதன்பின் குதித்துக் குதித்து ஓடி, உயரத்தைத் தாண்டுவான்.
இவர்களெல்லாம் கண் சிமிட்டுவது இல்லை.
டைகர் வூட்ஸ் என்பவர் ஒரு கோல்·ப் வீரர். எனக்கு மிகவும் பிடித்த ஆள். பெயர் ராசி. ஆகவே இன்னும் அதிகமாகப் பிடிக்கும்.
அவர் கோல்·ப் விளையாட்டில் அந்தக் கடைசி - அதாவது winning தட்டைத் தட்டப் போகும்போது நீண்ட நேரம் ஏதோ ஓர் ஒடுக்கத்தில் இருப்பார். கண்கள் திறந்தவாறு இருக்கும். கண்களைச் சிமிட்டவோ அசைக்கவோ மாட்டார். மூச்சு விடுகிறாரா என்பதைக்கூட அறியமுடியாது. மிக மிக மெதுவாகத் தோள்பட்டை, கைகள், மேல் உடம்பு மட்டும் லேசாக அசைந்து, அப்படியே லேசாகத் தட்டுவார்.
பந்து குழிக்குள் செல்லும்.
அப்படித்தான் சொல்லவேண்டும்.
ஏதோ ஒரு மானசீகக் கட்டளையை மேற்கொண்டு கோல்·ப் பந்து அப்படியே உருண்டு சென்று குழிக்குள் விழுந்து கட்டளையை நிறைவேற்றும்.
இந்த மாதிரியான Subliminal நிலை தியானத்தின் ஆரம்ப கட்டத்தில் ஏற்படும்.
அஷ்டாங்க யோகத்தில் தாரணை என்றொன்றுண்டு.


கோணா மனத்தைக் குறிக்கொண்டு கீழ்க்கட்டி
வீணாத்தண்டூடே வெளியுறத் தானோக்கிக்
காணக்கண் கேளாச்செவி என்றிருப்பார்க்கு
வாணாள் அடைக்கும் வழியதுவாமே


அந்த அளவுக்குப் போகமட்டுமே அது பயனாவதில்லை.
கோல்·ப் அடிக்கவும் பயன்படுத்தலாம்.
எல்லாம் ஒன்றுதான்.
Its All A Matter Of Application.

$$$$$$$$$$$$$$$$$$$$