Friday 23 September 2011

KUNGUMA POO

குங்கும மாஹாத்மியம்


SAFFRON FLOWER




Changes And Substitutes என்னும் இழையை எழுத ஆரம்பிக்கும்போது இவ்வளவு தூரம் அதற்கு Impact இருக்கும் என்று தோன்றவில்லை.  


நான் எதையும் புதிய விபரங்களாகக் கூறவில்லை. உங்களில் பலர் அவற்றையெல்லாம் அறியாமல் இருந்திருக்கலாம். அறிந்திருந்தாலும் அவற்றைப் பற்றி சிந்தியாது இருந்திருக்கலாம். சிந்தித்து இருந்தாலும் அதை எந்த அரங்கிலும் சொல்லாமலும் இருந்திருக்கலாம்.  குறைந்தபட்சம் அடிக்கும் அரட்டையில்கூட எடுத்து விட்டிருக்க மாட்டீர்கள்.   முக்கியமாகப் பட்டிருக்க மாட்டாது.
குங்குமம் என்னும் பொருளை நெற்றியில் வைக்கிறோம்.  திலகமாக வைக்கப்படும் அசல் ஆதி காலத்துக் குங்குமம் என்பது ஒரு மலரின் மகரந்தக் காம்பு. குங்குமப்பூ என்பது காஷ்மீர் போன்ற சில இடங்களில் வளரும் தாவரம் ஒன்றின் பூ. அந்தப் பூவில் செந்நிறமான மகரந்தக் காம்புகள் நீட்டிக்கொண்டிருக்கும். ஒரு பூவில் முன்று அல்லது ஐந்து காம்புகளே இருக்கும். 


இந்தப் பூக்களைப் பறித்து, அவற்றிலிருந்து காம்புகளை மிகவும் பதனமாக நீக்கி எடுத்துச் சேர்ப்பார்கள்.   இந்த மகரந்தக் காம்புகளுக்கு நறுமணமும் இளஞ்செந்நிறமும் உண்டு.  இதற்கு மருத்துவ குணமும் உண்டு. 

குங்குமப் பூவின் மகரந்தக் காம்புகளைக் காயவைத்து பதப்படுத்தித் தயாரிக்கிறார்கள்.  இதைப் பன்னீர் விட்டு உரசுகல்லில் உரசி எடுத்து, அதைக் குங்குமப் பொட்டாக அணிந்தார்கள்.  இதையே அதிக அளவில் செய்து உடலிலும் தடவிக்கொள்வதுண்டு.  இதைத்தான் குங்குமக் குழம்பு என்பார்கள்.  
 
அம்பிகையின் தியான சுலோகத்தில், 

 "சகுங்கும விலேபனாம் 
 அளிக ஸ¤ம்பி கஸ்தூரிகாம் 
ச மந்தஹஸி தேக்ஷணாம் 
ச சர சாப பாசாங்குசாம்
அசேஷ ஜன மோஹிணீம் 
அருணாமால்ய பூஷாம்பராம்
ஜபாகுஸ¤மபாஸ¤ராம்
ஜபவிதௌ ஸ்மரேத் அம்பிகாம்".


என்று வரும். 

குங்கும வர்ணம் உடையவள், உடைகளும் அதே வண்ணம். அதனுடைய வண்ணத்தையே இந்தப் பிரபஞ்சமெங்கும் நீக்கமறப் பிரகாசிக்கச் செய்கிறாள். 

"அருண கிரணஜாலைரஞ்சித ஆசவகாசா"

அவளுடைய செந்நிறத்தை வாங்கியே, இயற்கையில் ஸ்படிக நிறமுள்ள சிவனும் சிவந்தவர் ஆகிறார்.

அபிராமி பட்டர் அம்பிகையின் வடிவத்தைப் பற்றிச் சொல்லும்போது இளஞ்சூரியன், மாதுளம்பூ, குங்கமத் தோயம் என்று நிறத்தை வர்ணித்திருப்பார்.

குங்குமப் பூச்சில் குங்குமப் பூவை பன்னீர் விட்டு உரசுவார்கள். இதிலேயே பச்சைக் கற்பூரத்தையும் சேர்ப்பதுண்டு.   ஆனால் இதெல்லாம் விலை அதிகமான சமாச்சாரம். 

நடைமுறையில் நாம் பயன்படுத்தும் குங்குமம் வேறு வகையில் செய்யப்படுகிறது.   சுத்தமான குண்டு மஞ்சளை எலுமிச்சஞ் சாற்றில் ஊற வைத்து, படிகாரம்-வெங்காரம், நல்லெண்ணெய் முதலியவற்றுடன் செய்யப்படுகிறது. கஸ்தூரி, கோரோஜனை, போன்ற சில வாசனைப் பொருள்களையும் சேர்ப்பதுண்டு.   கையால் இடிக்கப்பட்டு,சல்லாத் துணியால் சலிக்கப்பட்டு தயாரிக்கப்படுவது. இதை 'வஸ்த்ரகாயம்' என்பார்கள்.   ஆள்காட்டி விரலை இதில் லேசாகத் தோய்த்து எடுத்து இடது உள்ளங்கையின் மணிக்கட்டு ஓரத்திலுள்ள சந்திரமேட்டில் தேய்த்துப் பார்த்தால் அந்த இடம் மஞ்சளாக Stain ஆகும்.   ஆனால் இப்போது பெரும்பாலும் அந்த மாதிரியெல்லாம் குங்குமத்தைச் செய்வதில்லை.
குங்குமம் என்ற பெயரால் பல Substitute-கள்.

அவற்றை வைத்துத்தான் உயர்குடி மக்கள் ஸ்ரீசக்ரப் பூஜைகளைச் செய்துவருகிறார்கள்.   அவர்களுக்கென்ன. ஸ்ரீசக்ரம், ஸ்ரீவித்யா, தேவீ மாஹாத்ம்யம் என்று வரும்போது அவர்கள் வைத்ததுதானே சட்டம். அது அவர்களுக்கே உரிய பிரத்தியேக உரிமையான வழிபாடாக அவர்கள் சாதிக்கிறார்கள். அவர்கள் சொன்னால் அது குங்குமம்தான். அட்டியில்லை.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

No comments:

Post a Comment